உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. மின்னணுக்கள்

லகிலுள்ள பொருள்கள் யாவும் அணுக்களால் அமைந்திருக்கின்றன என்பதையும் அந்த அணுக்கள் எல்லாவற்றிலும் மின்னணுக்கள் (electrons) பொருந்தியிருக்கின்றன என்பதையும் நாம் அறிவோம். தக்க முறைகளைக் கையாண்டால் பொருள்களிலிருந்து சில மின்னனுக்களைப்


படம் 21. அரக்குக் கோலக் கம்பளியால் தேய்த்தல்.

பெயர்த்து எடுத்துவிடலாம். தக்க பொருள்களைக்கொண்டு தக்கவாறு ஒன்றோடொன்று அழுத்தித் தேய்ப்பது ஒருமுறை. உரித்த மாதுளம்பழத்தின் உட்புறத்தை விரலால் அழுத்தித் தடவி விரைகளை உரித்து எடுப்பதுபோலவே பொருள்களிலிருந்து தேய்ப்பினால் மின்னனுக்களைத் தேய்த்து எடுத்துவிடலாம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/60&oldid=1396163" இலிருந்து மீள்விக்கப்பட்டது