உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்னணுக்கள்

53


கம்பளித் துணியால் அரக்குக்கோலைத் தேய்க்கின்றோம். கம்பளியிலிருந்து சில மின்னணுக்கள் பெயர்ந்து அரக்குக் கோலில் வந்து படிகின்றன. ஆதலால் அரக்குக்கோல் எதிர் - மின்னூட்டத்தைப் பெறுகின்றது; கம்பளியும் அங்ஙனமே நேர்-மின்னூட்டத்தை அடைகின்றது. அரக்குக் கோலின் அருகில் ஓர் அலுமினியத் தகடு பொதிந்த தக்கையைக் கொணர்ந்தால் அரக்குக் கோலிலிருந்து சில மின்னணுக்கள் தக்கையில் பாய்ந்து ஏறும். இப்பொழுது அரக்குக் கோலில் முன்னிருந்த அளவு எதிர் மின்னணுக்கள் இராமல் குறைந்து போகும்.

திருப்பதி புகைவண்டி நிலையத்தில் புரட்டாசியில் நடைபெறும் திருவிழாவுக்கு மக்கள் ஏராளமாக வந்து திரும்புகின்றனர். அவர்கள் புகைவண்டி நிலையத்தில் நிற்கும் வண்டிப் பெட்டிகளில் செளகர்யமாக இடம் கிடைக்காமல் அளவுக்குமீறி ஏறி நெருக்கி உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அதிகக் கூட்டத்தைக் கண்ட புகை வண்டி அதிகாரிகள் ஒருகாலிப் பெட்டி ஒன்றை வண்டித் தொடரோடு சேர்க்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். என்ன நேரிடும்? நெருக்கம் அதிகமாயிருந்த பெட்டிகளில் கதவோரங்களில் உட்கார்ந்திருக்கும் மக்கள் அவசர அவசரமாகக் கீழிறங்கி ஒடிப்போய்க் காலியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/61&oldid=1396245" இலிருந்து மீள்விக்கப்பட்டது