உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

இளைஞர் வானொலி

 இருக்கும் பெட்டியில் ஏறிக்கொள்வர். நெருக்கம் மிக்க பெட்டிகளில் நெருக்கம் குறையும். இப்பொழுது ஆளின்றிக் காலியாக இருந்த வண்டியில் ஆட்கள் நிறையும்.

மேற்கூறிய செயலைப்போலவே அரக்குக் கோலிலும் நடைபெறுகின்றது. அரக்குக் கோலில் மின்னணுக்கள் கூட்டமாகக் கூடியிருக்கின்றன. இதன் அருகில் கொண்டுவரப்பெற்ற தக்கையில் சமயம் கிடைத்ததென்று புதுப்பெட்டியில் மக்கள் பாய்ந்து ஏறுவதுபோல் மின்னணுக்கள் பாய்கின்றன. அரக்குக் கோலில் எதிர்மின்னூட்டம் குறைகின்றது. நடுநிலைமையுடனிருந்த தக்கை எதிர் - மின்னூட்டம் உடையதாகின்றது.

குளிர் காலத்தில் ஒருநாள் நாம் நம்முடைய காலடிகளைத் தரையில் விரிக்கப்பெற்றுள்ள கம்பளத்தில் தேய்த்து நம்முடைய கையால் கதவிளுள்ள உலோகக் குமிழைத் தொடுகின்றோம், உடனே நாம் அதிர்ச்சியை அடைகின்றோம். ஒரு மின் பொறி நம்முடைய கையிலிருந்து குமிழுக்குத் தாவுவதையும் சில சமயம் நாம் கண்ணுல் காணலாம். அரக்குக் கோலிலிருந்து தக்கைக்குப் பாய்ந்த மின்னணுக்களைப் போன்றதே இது. நம்மைப் பொறுத்த வரையில் ஒரு வினாடியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/62&oldid=1396247" இலிருந்து மீள்விக்கப்பட்டது