இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56
இளைஞர் வானொலி
இந்தப் பொறி அவ்வளவு முக்கியமானதன்று. அது வெட்டவெளியில் உண்டாக்கும் அலையே மிகவும் முக்கியமானது. முன்னும் பின்னுமாக அசைந்து அது வானொலி அலைகளைப் போன்ற மிக நுண்ணிய அலைகளை உண்டாக்குகின்றது. இச்செயல் ஒரு வினாடியில் இலட்சக் கணக்கான பகுதியொன்றில் நடைபெற்று முடிந்தாலும் அந்தக் குறுகிய காலத்தில் நமது விரலிலிருந்து ஆயிரக் கணக்கான சிறிய அலைகள் கிளம்பி அறை, முழுவதும் நிரம்பி விடுகின்றன. இதிலிருந்து ஒரு சிறு மின்பொறி வானொலி அலைகளை உண்டாக்கப் போதுமானது என்று தெரிந்துகொள்ளுகின்றோம்.