உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

இளைஞர் வானொலி


போல் இது மின்சாரத்தைச் சேகரம் செய்து வைக்கின்றது. நாம் நீர்த்தொட்டியினின்று நீரை எடுக்க விரும்பினால் தொட்டியின் அடியில் ஒரு துவாரத்தை அமைக்கின்றோம்; அல்லது தொட்டியின் பக்கவாட்டின் அடிப்புறத்தில் திருகுடன் கூடிய ஒரு குழலை அமைக்கின்றோம். நாம் குழலின் திருகினைச் சுழற்றினால் தண்ணீர் வெளிவருகின்றது. தொட்டியில் நீர் இருக்கும்வரை குழிலிலும் நீர் வந்துகொண்டிருக்கும்.

லெய்டன் சாடி ஒரு மின்னாக்கப் பொறியினைக் கொண்டோ, அல்லது மின்கலங்களைக் கொண்டோ மின்சாரம் ஏற்றப் பெறுகின்றது. இந்தச்சாடியினின்று நாம் மின்சாரத்தை அடைய விரும்பினால், நாம் இந்தச் சாடியின் உலோகக் குமிழின் மிக அருகில் வேறு ஒர் உலோகக் குமிழைக் கொண்டு வருகின்றோம். இப்பொழுது ஒரு குமிழிலிருந்து மற்றொரு குமிழுக்குப் பொறி முன்னும் பின்னுமாகத் தாவுகின்றது. அஃதாவது, நம்முடைய விரலுக்கும் கதவின் குமிழுக்கும் மிகச் சிறிய பொறி தாவியதுபோல இங்கும் தாவுகின்றது, ஆனால், இங்குப் பொறி முன்னும் பின்னுமாகப் போன வண்ணமிருக்கின்றது; சாடியில் சேகரம் செய்யப்பெற்ற மின்சாரம் இருக்கும் வரையில் இது நடைபெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/66&oldid=1396251" இலிருந்து மீள்விக்கப்பட்டது