இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஒத்த அதிர்ச்சி
63
களைத் தரலாம். மரத்தில் கட்டித் தொங்க விட்டிருக்கும் ஊஞ்சலில் ஒருவன் ஆடுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவன் அதே நிலையிலிருக்கும்பொழுது அவன் நண்பன் ஒவ்வொருதடவையும் ஊஞ்சலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிவிடுகின்றான். இப்போது ஊஞ்சல்
படம் 25. ஊஞ்சலில் ஆடுவோன் ஆடும் வேகத்தை அதிகரித்தல்.
சிறிதுசிறிதாக வேகமாகவும் உயரமாகவும் ஆடும். ஊஞ்சலில் ஆடுவோன் தன் கால்களைக் கீழே உதைக்காமலும் தன் நண்பனை ஆட்டச் சொல்லாமலும் தன் ஊஞ்சலை வேகமாக ஆட்டமுடியும். ஊஞ்சலின்மீது நின்று கொண்டே அவன் ஊஞ்சற் பலகையை உந்தி உந்தி உதைத்தால் ஊஞ்சல் வரவர வேகமாக ஆடும். ஆனால்,