உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒத்த அதிர்ச்சி

65



றும். அப்பொழுது அஃது ஒவ்வோர் அlaiயும் கொண்டுவரும் சிறிய அளவுள்ள சக்தியைச் சிதமல் ஏற்கின்றது. ஒவ்வோர் அலையும் கொண்டு

படம் 26. ஒர் ஊரிலுள்ள வான் கம்பியிலிருந்து வட்டமிட்டுச்
செல்லும் அலைகள் மற்றோர் ஊரிலுள்ள வான் கம்பியைத் தாக்குதல்.

வரும் சிறிய அளவு சக்தியை ஒவ்வொரு தடவையும் சிறிது சிறிதாக ஏற்றுக்கொண்டு-பல துளி பெருவெள்ளமாவது போல்-சக்தி சிறிது சிறிதாக அதிகப்பட்டுக் கொண்டே வரும். அங்ஙனம் வந்ததும் அதனிடத்தே ‘ஒத்த அதிர்ச்சி’ தோன்றும். அந்த அதிர்ச்சியினின்று ஒலி முதலிய பிற விளைவுகள் உண்டாகும். ஒர் ஊரிலுள்ள வான் கம்பியிலிருந்து வட்டமிட்டுச் செல்லும் அலைகள் மற்றோர் ஊரிலுள்ள வான்கம்பியைத் தாக்குவதைப் படம் விளக்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/73&oldid=1396379" இலிருந்து மீள்விக்கப்பட்டது