இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
68
இளைஞர் வானொலி
திறனை மாற்றிக்கொண்டே வருகின்றோம். மின் தங்கியின் அமைப்பும் லெய்டன் சாடியின் அமைப்பினைப் போன்றது. மின்தங்கியின் அமைப்பு படத்தில் காட்டப்பெற்றிருக்கின்றது. கைப்பிடிக் குமிழைத் திருகி நமக்கு வேண்டிய அலையின் அதிர்வு-எண்ணைப் பெறலாம். நம்முடைய வானொலிப் பெட்டியின் அதிர்வு-எண்ணும் நாம் விரும்பும் நிலையத்திலிருந்து வரும் அலையின் அதிர்வு-எண்ணும் ஒன்றாகும்போது நிகழ்ச்சிகளை நாம் கேட்கின்றோம்.