உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

இளைஞர் வானொலி


கான தடவைகள் திசைமாறிச் சென்று கொண்டிருந்தால் அதை இருதிசை மின்னோட்டம் (alternating current) என்று கூறுகின்றோம். முதலில் நேர்-மின்னூட்டம், அடுத்து எதிர்-மின்னுாட்டம் என்று இங்ஙனம் நேர்-மின்னூட்டம் எதிர்-மின்னூட்டமாக மாறிக்கொண்டிருப்பது இது. ஓர் அசையும் படத்தில் (movie) தனிப்படத்தைக் காணமுடியாததைப் போலவே, இந்த மாற்றங்களைத் தனியாகப் பிரித்து அறியமுடியாது.



படம் 28. ஒலி பரப்பும் வான்கம்பிகளும், வான்கம்பித் தூண்களும்.

நூறு அல்லது நூற்றைம்பது அடி உயரத்தில் தூண்களை நிறுத்தி அவற்றின் குறுக்காகவுள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/78&oldid=1396749" இலிருந்து மீள்விக்கப்பட்டது