பக்கம்:இளைஞர் வானொலி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாகன அலைகள்

71


பல செப்புக் கம்பிகளிடையே இந்த மாறுமின்னோட்டத்தை அனுப்புகின்றனர்; அங்கிருந்து அது வெட்டவெளியில் எம்மருங்கும் பரவுகின்றது. இந்த மின்னோட்டம் கம்பியினுள் அனுப்பப்பெறுவதற்கு முன்னர் பல பெரிய வெற்றிடக்குழல்களை (vacuum tubes) கொண்டு அது மிக வன்மையானதாக ஆக்கப்பெறுகின்றது. இது குறுக்குக் கம்பித் தொகுதியினின்று வெளிப்படுங்கால் இருதிசை வானொலி அலைகளை உண்டாக்குகின்றது.

ஒலிவாங்கியின் முன்னர் ஒருவர் வந்து பாடவோ அல்லது பேசவோ தொடங்குவதற்கு முன்னர் ஒலி பரப்பும் கருவி வெறும் வெட்ட வெளியில் அலைகளை வீசிக்கொண்டிருக்கும். இந்த அலைகள் உயரத்திலும் நீளத்திலும் ஒன்றுபோல் இருக்கும். இந்த அலைகள் நாலாபக்கங்களிலும் பரவிச் சென்றுகொண்டிருக்கும். இந்த அலைகள் வினாடியொன்றுக்கு 1,86,000 மைல் வீதம், அதாவது முப்பதுகோடி மீட்டர் வீதம் செல்லும். அலையின் வேகத்தை அதிர்வு-எண்ணால் வகுத்தால் அலைநீளம் கிடைக்கும். அலைவேகம் முப்பது கோடியாகவும், அதிர்வு எண் பத்து இலட்ச மாகவும் இருந்தால் அலைநீளம் =30,0000000/1,000,000= 300 ஆக இருக்கும். எனவே, ஒரு நிலையத்திலிருந்து இயற்றும் அலைகளின் அதிர்வு-எண் பத்து இலட்ச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/79&oldid=1396834" இலிருந்து மீள்விக்கப்பட்டது