பக்கம்:இளைஞர் வானொலி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

இளைஞர் வானொலி



மாக இருந்தால், அந்தநிலையத்திலிருந்து ஒவ்வொரு வினாடியிலும் 300 மீட்டர் நீளமுள்ள பத்து லட்சம் அலைகள் வானவெளியில் பரப்பப் பெற்றுக் கொண்டே இருக்கும். இந்த அலைகள்தாம் ஒருவர் பேசும் பேச்சினையும் பாடும் பாட்டையும் சுமந்துசெல்லுகின்றன. பேச்சிற்கும் பாட்டிற்கும் வாகனமாக அமைகின்றன.

படம் 39. வாகன அலைகள்.

இப்பொழுது ஒலிவாங்கியின்முன்னே ஒருவர் உட்கார்ந்து பாடுகின்றார் என்று கருதுவோம். இப்பொழுது அலைகளின் தன்மை மாறுபடும். பாடுவோரின் குரலின் மாறுபாடுகளுக்கு ஏற்ப அலைகளின் உயரம் மட்டிலும் மாறுபடும்; அலை நீளம் மாறுபடாது. பாடுவோரின் குரல் மாறுபாடுகளுக்கேற்ப ஒலிவாங்கியின் உட்புறத்தில் தோன்றும் மின்னோட்டத்தின் வன்மை மாறுபடுவதால், அலைகளின் உயரம் மாறுபடுகின்றது. இந்த அலைகளை மாறலைகள் (modulated waves) என்று வழங்குவர். பாடகரின் குரலில் தோன்றும் மாறுபாடுகள் அனைத்தையும் வானொலி அலைகள் ஏற்றுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/80&oldid=1396835" இலிருந்து மீள்விக்கப்பட்டது