வாகன அகலைகள்
73
சுமந்து செல்லுகின்றன. ஆகவே, அந்த அலைகள் வாகன அலைகள் (carrier waves) என்று வழங்கப்
படம் 30. மாறலைகள்.
பெறுகின்றன. ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வாகன அலை உண்டு. சில ஒலிபரப்பு நிலையங்களில் இரண்டு மூன்று வாகன அலைகளையும் ஏற்படுத்திக்கொள்வதுண்டு. சில சமயம் இந்த அலைகள் ஒன்றையும் சுமந்து செல்லா; ஆனால், பெரும்பாலான சமயங்களில் ஒலியலைகள் அவற்றின்மீது “ஏறிச்” செல்லும். இது மக்கள் ஏறிச் சென்றாலும் செல்லாவிட்டாலும் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும் மாடிப்படிக்கட்டினைப் (stairway) போன்றது என்று சொல்லலாம்.
நூற்றுக் கணக்கான வெவ்வேறு வாகன அலைகள் ஒன்றாகக் கலந்து நம்முடைய வானெலிப் பெட்டியினை அடையும்பொழுது அவை மிகவும் வலுவற்றிருப்பதால் அவற்றால் யாதொரு பயனும் இல்லை. அவை ஒலிபெருக்கியிலுள்ள மின்காந்தத்தினுள் அனுப்பப்பெற்றாலும் யாதொரு