74
இளைஞர் வானொலி
விளைவும் நேரிடாது அதில் சிறிதும் ஒலியே தோன்றாது. ஒரு பெரிய குளத்திலுள்ள நீரலைகள் குளத்தின் கரையை அடையும்பொழுது மறைவதைப்போல் அவையும் மறையத்தொடங்கும். அந்த அலைகளைத் தனித்தனியாகப் பிரித்து வன்மையுடையனவாகச் செய்தாலும், அவை ஒலி பெருக்கியில் யாதோர் ஒலியையும் உண்டாக்கா. காரணம், அவை வினாடியொன்றுக்கு இலட்சக்கணக்கான தடவைகள் வீதம் வேகமாக அதிர்வதும், நம்முடைய காதுகள் வினாடியொன்றுக்கு 30,000 தடவைகளுக்குமேல் கேட்க முடியாததுமே இதற்குக் காரணங்களாகும்.
இந்த வானொலி அலைகளைக்கொண்டு நம்முடைய ஒலி பெருக்கியில் ஒலியை உண்டாக்க வேண்டுமானால் நாம் மூன்று பெரிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவேண்டும். ஒன்று - இந்த வாகன அலைகளைத் தனித்தனியாகப் பிரித்து, ஒரு குறிப்பிட்ட அதிர்வு-எண்ணைக்கொண்டதை மட்டிலும் தேர்ந்தெடுக்கவேண்டும். லெய்டன் சாடிகளைப் பற்றிக் கூறும்போதும் அவற்றை எவ்வாறு சுருதிசெய்வது என்பதுபற்றிக் கூறும்போதும் இது எப்படி செய்யப்பெறுகின்றது என்பதைக் கண்டோம். இரண்டு - இந்த மிகச்சிறிய வலுவற்ற அலைகளை வலுவடையச் செய்தல் வேண்டும்: இல்லாவிடில் அவை பயனற்றுப் போகும். மூன்று —