இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16. அதிசய வெற்றிடக் குழல்கள்
தற்காலத்தில் உலகெங்கும் அருவினைபுரிந்து வரும் வானொலியும் (Radio), தொலைக் காட்சியும் (Television) ‘வெற்றிடக் குழல்கள்’ எனப்படும் இந்தப் புதுப்புனைவினால் செயற்படுகின்றன. நம்முடைய வானொலிப் பெட்டியில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வெற்றிடக் குழல்கள்
படம் 31. வெற்றிடக் குழல்.
இருக்கின்றன. ஆனால், வெற்றிடக் குழல்கள் என்ன செய்கின்றன ? அவை செயற்படுவதெங்ஙனம்? அவற்றின் அவ்வளவு முக்கியத்துவம் தான் என்ன ?
ஒலியுணர் கருவி அமைப்பிலிருந்து நம்முடைய வானொலிப்பெட்டியினுள் புகும் வலுவற்ற