உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிசய வெற்றிடக் குழல்கள்

77


வானொலி அலைகளை வலுவுடையனவாகச் செய்தலே வெற்றிடக் குழலின் முக்கியப் பணியாகும். இக்குழல் ஒரு விநோதமான மின்விளக்குக் குமிழைப் போன்றது. இக்குழலின் காற்று முழுவதும் அகற்றப்பெற்றிருப்பதால் இது ‘வெற்றிடக்குழல்’ எனப் பெயர் பெற்றது.

வெற்றிடக் குழலினுள் ஒளிவிடும் கம்பி - இழை ஒன்று உள்ளது; இக் கம்பி - இழை மின் விளக்குக் குமிழின் கம்பி-இழையை விடப் பிரகாசத்தில் குறைந்திருக்கும். இதில் ஓர் உலோகத் ட்டு இருக்கின்றது. இஃது எப்பொழுதும் நேர் மின்சாரத்தால் நிறைந்திருக்கும். ஒளிவிடும் கம்பி - இழைக்கும் நேர் - மின்னூட்டம் பெற்ற தட்டிற்கும் இடையில் ஒரு சிறிய வலைக்கம்பி (grid) இருக்கின்றது. இஃது ஒரு மெல்லிய கம்பிச் சுருளாகவோ, அல்லது முழுதும் துளைகளிடப் பெற்ற ஓர் உலோகத் தகடாகவோ இருக்கலாம். இந்த வலைக்கம்பி நேராக ஒலியுணர் கருவி அமைப்புடன் (antenna) பொருத்தப் பெற்றுள்ளது. இஃது உள்ளே வரும் இருதிசை மின்னோட்ட வானெலி அலைகளை ஏற்கின்றது. எனவே, இந்தச் சிறிய வெற்றிடக் குழலில் ஒரு சூடான ஒளிவிடும் கம்பி - இழை, உள்ளே வரும் இருதிசை மின்னோட்ட வானொலி அலைகளால் ஊட்டம் பெற்ற ஒரு மெல்லிய வலைக்கம்பி, எப்பொழுதும் நேர் —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/85&oldid=1397201" இலிருந்து மீள்விக்கப்பட்டது