உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

இளைஞர் வானொலி

 மின்னூட்டம் பெற்றுள்ள ஒரு சிறிய உலோகத் தகடு ஆகிய மூன்று பொருள்கள் இருக்கின்றன என்பதை அறிகின்றோம்.

குழலில் என்ன நடைபெறுகின்றது? சூடாக இருக்கும் கம்பி - இழை கோடானுகோடி மிகச் சிறிய, கண்ணால் காணமுடியாத, மின்னணுக்கள் (electrons) எனப்படும் எதிர் - மின்னூட்டம் பெற்ற அணுக்களை அனுப்புகின்றன. கம்பி-இழை சூடாக இருந்து ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் வரையில் அது மின்னணுக்களை அனுப்பிக் கொண்டே இருக்கும். இந்த மின்னணுக்கள் நேர் - மின்னூட்டம் பெற்ற தட்டினால் கவரப் பெறுகின்றன. ஒருவகை மின்னூட்டம் பெற்ற அணுக்கள் எப்பொழுதும் தம்மைத்தாம் விலக்கும் என்றும், மாறுவகை மின்னூட்டம் பெற்ற அணுக்கள் எப்பொழும் தம்மைத்தாம் கவர்ந்து நிற்கும் என்றும் நாம் அறிவோம் அல்லவா?

மேற்கூறியவாறு கம்பி-இழையினின்று நிலையாக ஒரருவிபோல் மின்னணுக்கள் பாய்ந்து செல்லும் வழியில் ஒரு வலைக்கம்பி இருக்கின்றது. இந்த வலைக்கம்பியோ வினாடியொன்றுக்கு இலட்சக்கணக்கான தடவைகள் நேர்-மின்னூட்டத்தையும்,எதிர்-மின்னூட்டத்தையும் மாறிமாறிப் பெற்றுக் கொண்டே இருக்கும். காரணம், இஃது இரு திசைமின்னோட்டமுள்ள ஒலியுணர் கம்பி அமைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/86&oldid=1397202" இலிருந்து மீள்விக்கப்பட்டது