பக்கம்:இளைஞர் வானொலி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதிசய வெற்றிடக் குழல்கள்

79

 புடன் பொருத்தப் பெற்றுள்ள தல்லவா? வலைக் கம்பி எதிர் மின்சாரத்தன்மை யுடனிருக்கும் பொழுது மின்னணுக்கள் விலக்கப்பெறுகின்றன. ஆகவே, அவை தட்டினை அடைதல் முடியாது. ஆனால், அஃது ஒரு வினாடியின் பத்து இலட்சத்தின் ஒருபகுதியின் காலத்தில் நேர்-மின்சாரத் தன்மையுடையதாகும்பொழுது மின்னணுக்கள் தட்டினை அடைவதோடன்றி அவற்றிற்கு ஓர் “உந்தலும்” தரப்பெறுகின்றது. இஃது ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு ஊஞ்சல் நம் அருகே வருங்கால் தரும் உந்தலைப் போன்றது. ஆதலால், மின்னணுக்கள் உலோகத் தகட்டை வேகமாக மோதி அதிக வன்மையைப் பெறுகின்றன. ஊஞ்சலில் ஆடுவோர் நம்முடைய உந்தலால் மேன்மேலும் உயர்ந்து ஆடுவதைப் போலவே, தட்டிலிருந்து வெளியேறும் மின்னூட்டமும் அதிக வன்மையை அடைகின்றது. இந்த வன்மையான துடிப்புள்ள மின்னோட்டத்தை அதிகமான குழல்களுக்குள் அனுப்பி அதன் வன்மையை மேன்மேலும் அதிகரிக்கச் செய்யலாம். இவ்வாறு செய்வதால் மின்னோட்டத்தின் அதிர்வு-எண்ணில் நாம் தலையிடுவதில்லை. நாம் அலைகளை வன்மையுடையனவாகச் செய்கின்றோமேயன்றி அதிர்வு-எண்ணை அதிகரிக்கச் செய்வதில்லை. ஆகவே, ஒலிபரப்பு நிலையத்திலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/87&oldid=1397204" இலிருந்து மீள்விக்கப்பட்டது