உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளைஞர் வானொலி

——÷——

1. மந்திர அலைகள்

நாம் வசிக்கும் அறையில் கோடிக்கணக்கான கண்ணால் காண முடியாத மிகச் சிக்கலான ஒலி அலைகள் உள்ளன. இவற்றுள் ஒவ்வொன்றும் பிறிதொன்றினின்றும் முற்றிலும் வேறுபட்டவை. அவை சுவர்கள் வழியாகவும், தரைவழியாகவும், கூரைவழியாகவும் நம்முடைய வீட்டிற்குள் நுழைகின்றன. இந்த அலைகள் இங்குமங்குமாகக் குறுக்கிட்டு வலையைப்போல் பின்னிக் கிடக்கின்றன. இவை நம்முடைய சாமானியக் காதுகளுக்குக் கேட்பதில்லை. ஒலியலைகளைப் போலவே, ஒளியை ஏற்றுச் செல்லும் அலைகளும் கோடிக்கணக்கானவை ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றன. இவையும் நம்முடைய சாமானியக் கண்களுக்குத் தோன்றுவதில்லை. இந்த அலைகள் வானவெளியில் அலைந்து திரிந்த வண்ணமிருக்கின்றன. நமக்கு அமைதியாகத் தோன்றுவது போல் காணப்படும் வானவெளி உண்மையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/9&oldid=1394171" இலிருந்து மீள்விக்கப்பட்டது