82
இளைஞர் வானொலி
ஞானிகள் உலகிலுள்ள அனைத்தையும் மறந்து ஆண்டவனைக் குறித்துச் சிந்தனைசெய்து மன உறுதியுடன் அவனோடு ஈடுபட்டிருப்பர். நம்முடைய வானொலிப் பெட்டியும் அந்த ஞானியின் நிலையில் உள்ளது. நாம் ஒரு குறிப்பிட்ட நிலையத்திலுள்ள நிகழ்ச்சிகளைக் கேட்கவேண்டுமென்று விரும்பி பெட்டியின் கைப்பிடிக் குமிழ்களை இயக்கித் தக்கவாறு சுருதிசெய்தால் (tuning) நம்முடைய பெட்டி அந்த நிலையத்திலிருந்து வரும் அலைகள மட்டிலுமே ஏற்கும். சுருதி செய்யப்பெற்ற கருவி பிற நிலையங்களிலிருந்து வரும் அலைகளை ஏற்காது. மன உறுதியுடன் இருக்கும் ஞானிக்கு இறைவனுடைய அனுபவம் ஏற்படுவதுபோலப் பெட்டியும் ஒரு குறிப்பிட்ட நிலையத்தின் நிகழ்ச்சிகளை நமக்குத் தருகின்றன.
நிகழ்ச்சிகளை நாம் கேட்கவேண்டுமானல் வாகன அலைகளினின்று , ஒலியலைகளைப் பிரிக்க வேண்டும். பிரித்துப் பெட்டியின் ஒலிபெருக்கியினுள் அனுப்பினால் பெட்டி மின்சார அதிர்வுகளை ஒலி அதிர்வுகளாக மாற்றும். இது பெட்டியிலுள்ள ஒலியுணர் உறுப்பினால் (detector) இயற்றப் பெறுகின்றது. ஒலியுணர் உறுப்பு என்பது, ஒரு வகை வெற்றிடக் குழலே. இந்த வெற்றிடக் குழலில் ஒளிவிடும் கம்பி-இழைக்கும் உலோகத் தட்டிற்கும் இடையில் வலைக்கம்பி (grid) இருக்