உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

இளைஞர் வானொலி


அதிர்கின்றன. இப்பொழுது வாகன அலைகளின் துணையின்றியே ஒலியலைகள் தம்முடைய பணியை நிறைவேற்றுகின்றன. இந்த ஒலியயும் நிலையத்தில் உயரமான கம்பிக்கு அனுப்பப்பெற்ற ஒலியலையும் அளவிலும் தன்மையிலும் ஒருமைப்பாடுடையது. அஃதாவது, இந்த அலை தொலைபேசியின் கம்பிகளில் அதிரும் அதிர்வுகளைப் போன்றே இருக்கின்றது. இது நம்முடைய வானெலிப் பெட்டியிலுள்ள ஒலிபெருக்கியின் மின்காந்தத்தினுள் நுழைவதற்கேற்ற வன்மையுடனும் இருக்கின்றது. இந்த அலை ஒலிபெருக்கியில் புகுந்ததும் காகிதக் கூம்பினுடன் பொருத்தப் பெற்றுள்ள உலோகத்தட்டினை அதிரச் செய்கின்றது. வானொலி நிலையத்தில் ஒலிவாங்கியில் நுழைந்த அதே ஒலிகள் இப்பொழுது ஒலி பெருக்கியிலிருந்து வெளிவருகின்றன. அங்கு ஒலிபரப்பப் பெறும் நிகழ்ச்சிகளை நாம் அனுபவிக்கின்றோம்.

இத்தனைச் செயல்களும் மிக விரைவாக நடைபெறுகின்றன. நிகழ்ச்சிகளை வானொலி நிலையத்திலுள்ளோர் கேட்கும் அதே சமயத்திலேயே நாமும் வீட்டிலிருந்தபடியே கேட்கின்றோம், ஏன்? ஒருவினாடியின் ஒரு சிறுபகுதிக்கு முன்னரே கூடக் கேட்கின்றோம் வானொலி அலைகள் வினாடியொன்றுக்கு 1,86,000 மைல்கள் வீதமும் ஒலியலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/92&oldid=1397214" இலிருந்து மீள்விக்கப்பட்டது