பக்கம்:இளைஞர் வானொலி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வானொலி

87



யத்திற்கு அனுப்பப்பெறுகின்றது. அதிரும் இந்த மின்னோட்டம் ‘ஒலியலை’ என்று வழங்கப் பெறுகின்றது.

மூன்றாம்நிலை: இந்த ‘ஒலியலை’-அஃதாவது அதிரும் மின்னோட்டம்-சில ஒலிக்குழல் களின் துணையினால் மிக வன்மையாக்கப் பெற்று மிக உயர்ந்த அதிர்வினைக் கொண்ட ‘வாகன அலை’யுடன் சேர்த்து உயரமான கம்பிக்கு அனுப்பப்பெறுகின்றது. வாகன அலை வானவெளியில் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு ஒலியலையினைச் சுமந்து செல்லுகின்றது. ஒவ்வொரு நிலையத்திற்கும் இந்த அலையின்நீளம் வரையறை செய்யப்பெற்றிருக்கும். இது நகரும் படிக்கட்டினைப் போன்று சதா உயரமான கம்பிக்குப் போகும் வண்ணமிருக்கும். நிலையம் ஒலி பரப்பும் நிலையிலிருக்கும் வரையிலும் ("On the air") தன்மீது ஒலியலை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இஃது அந்தக் கம்பியின்மீது இருந்துகொண்டே இருக்கும். வாகன அலை எப்பொழுதும் இருதிசை மின்னோட்டமாகவே இருக்கும். இது வினாடியொன்றுக்கு இலட்சக் கணக்கான தடவைகள் அதிரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/95&oldid=1397226" இலிருந்து மீள்விக்கப்பட்டது