உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் வானொலி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 89

வானொலி

னோட்டம் ஒலிபெருக்கியினுள் புகுவதற்கு ஏற்ற நிலையை அடைகின்றது.

ஏழாம்நிலை: ஆனால், வன்மையான துடிப்பு அலை அதிகமாக அதிர்வதால் அஃது ஒலி பெருக்கிக்கு ஏற்றதாக இல்லை. அஃது அதனுள் புகுந்தாலும் அதனுடைய உலோகத் தகட்டை வினாடியொன்றுக்கு இலட்சக்கணக்கான தடவைகள் அதிரச்செய்யும்; ஆனால், யாதோர் ஒலியும் நமக்குக் கேட்காது. ஏனெனில், நம் காதுகள் அத்தகைய அதிர்வுகளைக் கேட்க முடியா. ஆகவே, அந்த அலையைச் செவி இயல் அதிர்வுடையதாகச் (audio frequency) செய்யவேண்டும்.

எட்டாம்நிலை: வாகன அலை இப்பொழுது ஒலியுணர் கருவி எனப்படும் ஒரு வெற்றிடக் குழலினுள் அனுப்பப்பெறுகின்றது. இக் குழல் இருதிசை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக மாற்றுவதுடன் அலையின் அதிர்வு - எண்ணைச் செவி இயல் அதிர்வுக்குக் குறைக்கின்றது. இதனால் வாகன அலையினின்று ஒலி அலை பிரிகின்றது. இது மின்சாரத்துடிப்பு வடிவில் ஒலிபெருக்கியினுள் நுழையும் தகுதியுடன் உள்ளது.

ஒன்பதாம்நிலை: ஒலியலைகள் ஒலிபெருக்கியின் மின்காந்தத்தினுள் நுழைகின்றன. நுழைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளைஞர்_வானொலி.pdf/97&oldid=1706343" இலிருந்து மீள்விக்கப்பட்டது