பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூடிக்கொண்டிருக்கும். கடினமான பாறைகளும்கூட அதிக வெப்பத்தால் உருகி விடுவ

அலாஸ்காவிலுள்ள எரியும் எரிமலை

தும் உண்டு. அப்போது உண்டாகும் வாயுக்களின் அழுத்தத்தின் காரணமாக உருகிய

ஆறிய எரிமலை வாய்

பாறைக் குழம்புகள் தரையைப் பிளந்து கொண்டு வெளிப்படும்.

வெடித்து வெளிக்கிளம்பும் பாறைக் குழம்புகள் சுற்றிலும் படிந்து ஆறி மீண்டும் கெட்டியாகிவிடும். கெட்டியான இத்தகைய எரி மலைக் குழம்புகள் மலைபோல் காட்சி தரும். இத்தகைய எரிமலை ஒன்று ஈக்வடார் நாட்டில் உள்ளது. இதன் உயரம் 6,000மீட்டராகும். இதில் எரிமலைக் குழம்பு வெளிப்பட்ட எரிமலை வாய் இருக்கிறது. எரிமலைக் குழம்பு வெளியேறுவது நின்றவுடன் இவ்வாயும் அடைபட்டுவிடும்.

எரிமலைகள் நிலப்பகுதிகளில் மட்டுமல்ல கடற்பகுதிகளிலும் உண்டு. கடலில் வெடித்து எரிமலைக் குழம்புகள் வெளிப்படும்போது பேரலைகள் எழும். இதனால் இக்கடற்கரைகளின் ஓரத்தில் அமைந்துள்ள நகரங்கள் பெரும் பாதிப்புக்காளாவதும் உண்டு.

உலகில் சுமார் ஐந்நூறுக்கு மேற்பட்ட எரி மலைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவற்றுள் இத்தாலியில் உள்ள வெசூவியஸ் எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதன் உச்சிப்பகுதி இன்றுங்கூட புகைந்துகொண்டிருக்கிறது. இவ் வெரிமலை கி.பி. 79ஆம் ஆண்டில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.