பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

ஐசக் நியூட்டன்

சக்திமிக்க குண்டு வைக்கப்பட்டிருக்கும். இலக்கை அடைந்த ஏவுகணையின் குண்டு கட்டிடத்தின்

அக்னி ஏவுகணை

மீதோ அல்லது வேறெந்தப் பொருளின் மீதோ தரையின் மீதோ மோதியவுடன்குண்டு வெடித்துச்சிதறிச் சேதத்தை ஏற்படுத்தும். குண்டின் சக்திக்கேற்ப அழிவு ஏற்படும்.

பீரங்கியால் செலுத்தப்படும் குண்டுகளை ஏவிய பின் கட்டுப்படுத்தவோ திசை திருப்பவோ இயலாது. ஆனால் ராக்கெட் மூலம் ஏவப்படும் ஏவுகணையைக் கட்டுப்படுத்தவோ திசை திருப்

விண்ணோக்கிப் பாயும் ஏவுகணை

பவோ இயலும். தற்கால ஏவுகணைகள் கணிப்பொறி துணை கொண்டு துல்லியமாக இயங்குகின்றன.

ஏவுகணைகளைத் தரையிலிருந்தோ விமானத்திலிருந்தோ கடலில் மிதக்கும் கப்பலிலிருந்தோ கடலுள் செலுத்தும் நீர் மூழ்கிக் கப்பலிலிருந்தோ செலுத்த முடியும்.

இந்தியாவும் ஆற்றல் மிக்க 'அக்னி' எனும் ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. 'ஆகாஸ்' என்பது இந்தியா உருவாக்கியுள்ள மற்றொரு ஏவுகணை ஆகும்.

ஐசக் நியூட்டன் : அறிவியல் உலகின் தனித் தாரகையாக ஒளிவீசுபவர் ஐசக் நியூட்டன் ஆவார். மாபெரும் கணித மேதையாகவும் வானவியல் அறிஞராகவும் திகழ்ந்தவர்.

மாபெரும் வானவியல் விஞ்ஞானியாகத் திகழ்ந்த கலிலீயோ இறந்த 1642ஆம் ஆண்டிலேயே ஐசக் நியூட்டன் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள ஊல்ஸ்திரோப் எனுமிடத்தில் பிறந்தார். இவர் பிறக்குமுன் இவர் தந்தை இறந்துவிட்டார்.இளமையில் மந்தமாக இருந்த இவரை இவர் தாயார் பள்ளிப்படிப்பை நிறுத்தி பண்ணை வேலையில் ஈடுபடுத்தினார். அதில் இவருக்கு ஈடுபாடு ஏற்படவில்லை. இவர் நாட்டமெல்லாம் ஆராய்ச்சியிலேயே இருந்தது. இதையறிந்த இவர் தாயார் இவரை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்த்தார். இங்கு இவர் அறிவியல் நுட்பங்களையும் கணக்கியலையும் வெகு விரைவாகக் கற்றறிந்தார். இருபத்தியொரு வயதாகும்போது இவர் யார் துணையுமின்றி தானாக ஆராய்ச்சியில் ஈடுபடலானார். அன்று கண்டறியப்பட்டிருந்த தொலைநோக்காடி வானவியல் ஆராய்ச்சியில் பேரார்வத்தை ஏற்படுத்தியிருந்தது. ஐசக் நியூட்டனும் அதில் பேரார்வம் கொண்டிருந்தார். தொடர் ஆய்வை மேற்கொண்டார்.

இன்றைய வானவியல் ஆய்வின் அடிப்படையாக அமைந்துள்ள ஈர்ப்பியல் தத்துவத்தை முதன்முதலில் கண்டறிந்து கூறியவர் ஐசக் நியூட்டன் ஆவார்.

ஒரு சமயம் இவர் ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு ஆப்பிள் பழம் மரத்திலிருந்து கீழே விழுவதைக் கண்டார். ஆப்பிள் பழம் ஏன் மேலேயிருந்து கீழ் நோக்கி விழவேண்டும், இதற்குக் காரணம் என்ன? எனச் சிந்திக்கத் தொடங்கினார். அவ்வாராய்ச்சியின் விளைவாக அவர் கண்டுபிடித்த உண்மையே 'புவியீர்ப்பு விசை' அதன் பின்னர் அவர் தொடர்ந்து ஆய்வு செய்து பூமி மட்டுமல்ல, வானிலுள்ள கிரகங்கள். நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தும் ஈர்ப்பாற்றலோடு இருப்பதைக் கண்டறிந்தார்.