பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

கடிகாரங்கள்


கடிகாரங்கள் : பழங்காலத்தில் நம் முன்னோர்கள் நேரத்தை அறிந்து கொள்ள நிழலின் அளவை அளவு கோலாகக் கொண்டனர். கிழக்கே நிழல் நீண்டிருந்தால் காலை நேரம் என்றும் மேற்கே நீண்டிருந்தால் மாலை

நிழல் மூலம் காலக் கணிப்பு

நேரம் என்றும் அறிந்தார்கள். நிழல் குறுகலாக இருந்தால் நண்பகல் என்று கொண்டார்கள். இவ்வாறு நிழலைக் கொண்டு நேரம் அறிவது பகற்பொழுதில் மட்டுமே இயன்றது.

சூரிய ஒளி குறைந்த, மேகமூட்டம் நிறைந்த நாட்களிலும் இரவுக் காலத்திலும் நேரத்தை அறிய நீர்க்கடிகாரத்தைப் பயன்படுத்தி வந்தார்கள். ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, ஒரு சிறு துளை வழியாக நீரைச் சொட்டச் செய்வார்கள். சொட்டிய நீரின் அளவைக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டறிவார்கள். நீருக்குப் பதிலாக மனலைப் பயன்படுத்துவதும் உண்டு.

மணல் கடிகாரம்

மணல்கடிகாரப் பாத்திரத்தின் மேற்பகுதியும் கீழ்ப் பகுதியும் அகன்ற கின்னங் கொண்டிருக்கும். இரண்டுக்கும் இடையே ஒடுக்கமான பாதைஇருக்கும். அதன் வழியே மணல் கொஞ்சம் கொஞ்சமாக கீழ்ப்பகுதிக் கிண்ணத் தில்விழும். விழுந்துள்ள மணலின் அளவைக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டறிவார்கள். கீழ்ப்பகுதிக் கிண்ணத்தில் மணல் முழுமையும் கொட்டிய பின்னர் தலைகீழாக திருப்பி வைத்து மீண்டும் மணலை விழச் செய்து நேரம் அறிவார்கள். இம்முறை நீண்ட காலமாக இந்தியா, எகிப்து. சீனா, ரோம, கிரேக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. மெழுகுவர்த்தியை எரியச் செய்து அதன் உருகிய பகுதியைக் கணக்கிட்டு நேரம் அறியும் முறையும் இருந்து வந்தது.

இன்றுள்ள இயந்திர நுட்பத்தோடு கூடிய முதல் கடிகாரத்தை ஹென்றி டி விக் என்பவர் 1800ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இன்றைய நவீன கடிகாரங்களுக்கு முன்னோடியான

மணிக்கூண்டு

இக்கடிகாரத்தினுள் பற்சக்கரமும் முகப்பில் நேரங்காட்டும் முள்ளும் (Dial)இருந்தன.