பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கணிதம்

111

குறிப்பிட்ட உலோகச் சேர்மங்கள் குறிப்பிட்ட நிறங்களை தருகின்றன. அச்சேர்மங்கள் கண்ணாடி குழம்பில் சேர்க்கப்பட்டு வண்ண வண்ணக் கண்ணாடிகள் தயாரிக்கப் படுகின்றன. இதுவே வண்ணக் கண்ணாடி சரவிளக்குகள் தயாரிக்க உதவுகின்றன.

கணக்குப் பொறி : நாம் பலமணி நேரங்கள் போட வேண்டிய கணக்குகளை ஒரு சில விநாடிகளுக்குள் போட்டுவிடும் திறன் பெற்றவை கணக்குப்பொறிகள் (Calculating Machine) ஆகும்.

கணக்குப் போடும் பொறியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கணிதமேதை பிளெங் பாஸ்கல் என்பவராவார். இவர் இதனை 1842ஆம் ஆண்டில் முதன்முதலாக வடிவமைத்தார். இதுவே முதலாவதான கணக்கிடும் எந்திரமாகும். தொடக்கத்தில் இப்பொறியின் மூலம் கூட்டல் கணக்கு மட்டுமே போட முடிந்தது.

அதன்பின் 1889ஆம் ஆண்டில் பல்வேறு சீர்திருத்தங்களோடு அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட கணக்குப் பொறி மூலம் கூட்டலோடு கழித்தல், வகுத்தல், பெருக்கல் ஆகியகணக்குகளையும் விரைந்து போட முடிந்தது. பின் வர்க்கமூலங்கள் சதவீதங்களைக் கணக்கிடும் அமைப்புடன் உருவாக்கப்பட்டன. இதன் பின் இப்பொறியின் வளர்ச்சி துரிதமடைந்தது. பல்வேறு வடிவங்களில் அளவுகளில் கணக்குப் பொறிகள் வெளிவரலாயின. இன்று உலகெங்கும் உள்ள சாதாரண மக்கள் பள்ளிச் சிறுவர்கள் உட்பட கையடக்கமான கணக்குப் பொறிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இவற்றின் அளவு தீப்பெட்டியைவிடச் சிறியதாகிவிட்டன. இவை பட்டன் மின்கலத்தால் இயங்குகின்றன. கனத்த தாள் அளவில் சூரிய ஆற்றலால் இயங்கும் கணக்குப் பொறிகளும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய கணக்குப் பொறி தயாரிப்பில் ஜப்பான் முதலிடம் பெறுகிறது.

கணிதம் : அறிவியலின் முக்கிய பிரிவுகளாகிய இயற்பியல், பொறியியல், வேதியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல சமுதாய வளர்ச்சிக்கும் இன்றியமையாத்துறையாக கணிதவியல் விளங்கி வருகிறது. கணிதவியல் பல்வேறு பிரிவினவாக அமைந்து வளர்ந்து வந்துள்ளன. அவற்றுள் எண்கணிதம் (Arithmatics), வடிவக்கணிதம் ((Algebra), வடிவகணிதம் (Geomentry), திருகோணகணிதம் (Trigonometry) என்பன சிலவாகும்.

எண்கணித வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியவர்கள் இந்தியர்கள் எனலாம். அராபியர்களும் சீனர்களும் கிரேக்கர்களும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள். எண்களின் துணை கொண்டு கணக்கிடுவதே எண் கணித மாகும். சாதாரணமாக 1,2,3,4,5,6,7,8,9,0 என்ற எண்களைக் கொண்டு கணக்குப் போடப்படுகிறது. இந்த எண்முறைகளைக் கண்டறிந்து பயன்படுத்தியவர்கள் இந்தியர் என்பது வரலாறு. இவற்றுள்ளும் ‘0’ என்ற பூஜ்ய எண் குறியீட்டைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தியது கணித வரலாற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும். எண் கணிதத்தின் உட்பிரிவுகளாக அமைந்திருப்பவை கூட்டல், பெருக்கல், வகுத்தல் முதலியனவாகும்.

எண்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எழுத்துக்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் முறைக்கு இயற்கணிதம் (Algebra) என்று பெயர் 'R' எனும் எழுத்து ஆரத்தின் நீளம். 'D' எனும் எழுத்து விட்டத்தின் நீளம், ஒரு வட்டத்தின் விட்டம் அதன் ஆரத்தைப் போல்

வடிவ கணிதத் தந்தை யூக்ளிடு

இருமடங்கு எனும் உண்மையை D-2R எனக்குறிக்கப்படுகிறது. இவ்வாறு எழுத்துக்களைக் கொண்டு கணக்கிடும் இயற்கணிதத்தை எண்