பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

காமிரா

சாதாரணமாகக் காந்தத்தை இரு வகையினவாகப் பிரிப்பர். அவை நிலைக்காந்தம், தற்காலிகக் காந்தம் என்பனவாகும்.

காந்தத் தூண்டலால் காந்தமேற்றப்பட்ட தேனிரும்பு காந்தத் தன்மை பெறுகிறது. இதிலேற்றப்பட்ட காந்த சக்தி குறைந்த கால அளவே நீடிப்பதால் இது தற்காலிக காந்த முறையாகிறது. நிலைத்த காந்த சக்தியை உண்டாக்க எஃகு சிறந்த தனிமமாக உள்ளது. காந்த ஆற்றல் காந்தத்தின் இருமுனைகளிலேயே மிக அதிக அளவில் அமைந்துள்ளது. நிக்கலும் கோபால்ட்டும் முக்கியமான காந்தப் பொருட்களாக உள்ளன.

அறிவியலின் அரிய கண்டுபிடிப்பாக 'மின் காந்தம்’ அமைந்துள்ளது. காப்பிட்ட மின் கம்பிகளை இரும்புக்கோலில் சுற்றி அதன் வழியே மின்சாரத்தைப் பாய்ச்சினால் அக்கம்பு காந்தத் தன்மையைப் பெறுகிறது. மின்னோட்டத்தை நிறுத்தினால் அக்கம்பியும் கோலும் காந்தத்தன்மையை இழந்துவிடுகின்றன. இம் முறையில்தான் மின்காந்தம் உருவாக்கப்படுகிறது.

இன்றைய நம் வாழ்வில் நீங்கா இடம் பெற்றுள்ள மின்விசிறி, வானொலி, தொலைபேசி, தொலைக்காட்சி எல்லாமே மின்காந்த சக்தியைக் கொண்டு இயங்குவனதாம்.


காமிரா : 'போட்டோ’ படம் எடுக்க உதவும் கருவியே ஆகும். இஃது பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டாலும் ஒரே

ஒளிப்படக் கருவி (காமிரா)

வித அடிப்படையிலேயே ஒளிப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

ஒளிப்படப் பெட்டி உள்ளே காற்றுப் புக முடியாதபடி தயாரிக்கப்பட்டுள்ள கருவியாகும். இக்கருவியின் முகப்பில் ஒரு நுண் துளைப் பகுதி உண்டு. அப்பகுதியை ஒட்டி லென்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். துளைப்பகுதி உலோகத் தகடு ஒன்றால் மூடப்பட்டிருக்கும். ஒளிப்படம் எடுக்கும்போது மேலே பொருத்தப்பட்டுள்ள பொத்தான் ஒன்றை அழுத்தினால் கண் இமைக்கும் நேரத்திற்குள் இம்மூடி திடீரெனத் திறந்து மூடிக்கொள்ளும். அவ்விமைப்பொழுதிற்குள் திறந்த மூடி வழியே ஒளி லென்ஸ் வழியே பாய்ந்து பின்புறமுள்ள பிலிமில் முன்னால் உள்ள உருவம் படமாகப்

ஒளிப்படக் கருவி அமைப்பு

பதிவாகி விடுகிறது. அப் பிலிமில் படப்பதி விற்கான இரசாயனப் பொருள்கள் பூசப்பட்டிருக்கும். படம் பதிந்த பிலிமை தனியே வெளியே எடுத்து அதிக வெளிச்சமில்லாச் சூழலில் இரசாயனக் கலவைகளில் கழுவினால் பதிவான ஒளிப்படம் தெளிவாகத் தெரியும். அப்பிலிமிலிருந்து எத்தனை பிரதிகள் வேண்டுமாயினும் எடுத்துக் கொள்ள முடியும்.

காமிராவின் துளையை அடுத்துள்ள உலோக மூடி சிறுசிறு தகடுகளைக் கொண்டு அடுக்கப்பட்டிருக்கும். இதனை விரிக்கவோ சுருக்கவோ முடியும். இதனால் காமிராவினுள் செல்லும் ஒளியைத் தேவையான அளவில் கட்டுப்படுத்திப் பெற இயலும். ஒளி குறைந்த சூழலில் படம் எடுக்க நேரின் இணைந்துள்ள தகடுகளை அதிகம் விரியச் செய்தோ அல்லது ஒளி மிகுந்த சூழலில் படம் எடுக்க நேர்ந்தால் இத் தகடுகளை சுருக்கவோ தகுந்த அமைப்பு அதில் உண்டு. தூரத்திற்கேற்றபடி லென்ஸை நகர்த்திக் கொள்ளவும் இதில் அமைப்பு