பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அச்சடித்தல்

போல் இதமான மணம் தந்து மகிழ்விக்கும், இந்தியா, எகிப்து,அரேபியா ஆகிய நாடுகளில் பண்டுதொட்டே மணப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அகில் எண்ணெய் சிலவகை நோய்களுக்கு மருந்தாகவும் பயன் படுகிறது.

அகில மரக்கிளை

அகில் மரத்துண்டுகளை சிறுசிறு பகுதிகளாக நறுக்கி கொதி நீரில் போட்டுக் கொதிக்க வைத்தால் அதிலிருந்து நறுமண எண்ணெய்ப் பொருள் வெளிவரும். இவை பிரித்தெடுக்கப்பட்டு, 'அகர்-அத்தர்’ எனும் நறுமண எண்ணெய்ப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

அகில் மரக்கட்டைகள் வெண்மை நிறமுடையவை. இவை கனமற்றவையாதலால் அவற்றைக் கொண்டு நகைப்பெட்டிகள் செய்யப்படுகின்றன. அகில் மரப்பட்டைகள் புத்தகங்களுக்கு உறையிடப் பயன்படுத்தப்படுகின்றன. அகில் மரத்தூளை துணிகள் மீதும் தோற்பொருட்களின் மீதும் தூவினால் அவைகளைப் பூச்சிகள் அண்டாது. அகில் மரப் பட்டைகள் நார்த்தன்மை மிக்கவைகளாதலால் அவை காகிதத் தயாரிப்புக்கும் பயன்பட்டு வருகின்றன. ஊதுவத்திகள், அகர்வத்தி ஆகியவை அகிலிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.

அகில் பிசின் அதிகமுள்ள மரம், சாதாரண அகில் மரத்தைவிடக் கனமுள்ளதாக இருக்கும்.

அகில் மரம் அஸ்ஸாமில் அதிக அளவில் விளைகிறது. அதிக அளவில் அகில் விளையும் நாடுகளில் பர்மாவும் ஒன்று.

அச்சடித்தல் : இன்று அழகாக அச்சடிக்கப்பட்ட நூல்களை எளிதாகப் பெற்று படித்து மகிழ்கிறோம். அவற்றில் அச்சிடப்பட்டுள்ள வண்ணப்படங்கள் கண்ணையும் கருத்தையும் கவருகின்றன. ஆனால், முன்னுாறு ஆண்டுகட்கு முன்பிருந்த நிலையை எண்ணிப் பாருங்கள். அன்றைக்கு ஓலையும் எழுத்தாணியும் மட்டுமே எழுதுபொருள்கள். எவ்வளவு சிறந்த நூல்களாயினும் அவற்றை ஒருசில படிகளே எடுக்க முடிந்தன. அவை அனைத்தும் கையாலேயே எழுத நேர்ந்ததால் அதிக சக்தியும் நேரமும் செலவிட வேண்டியதாகியது. இதனால் அறிவு வளர்ச்சியும் கூட மெதுவாகவே நடைபெற வேண்டியதாயிற்று.

தாளும் அச்சும் கண்டறியப்பட்ட பின்னரே விரைவான அறிவு வளர்ச்சி ஏற்பட ஏதுவாயிற்று பதினாறாம் நூற்றாண்டிற்குப் பின்னர் தான் அச்சுத் தொழில் நம் நாட்டில் கால் பதித்தது. அதன்பின் அறிவு வளர்ச்சியும் அறிவுத் துறைகளில் வளர்ச்சியும் துரிதமடையலாயிற்று.

தொடக்கக் காலத்தில் மை தடவிய அச்செழுத்துக்களின் மீது தாளைப் பதித்து எடுத்து அச்சிடும் முறையே இருந்து வந்தது. அதன்பின் அதற்கெனக் கண்டுபிடிக்கப்பட்ட அச்சு எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

இன்று அச்சுத்தொழில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. பல்வேறு வகையான எந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அச்சுத் தொழில் மிகச் சிறப்பாக நடை பெற்று வருகிறது. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்:

தட்டு அல்லது மிதி அச்சு எந்திரம் : 'பிளேட்டன்’ என்றழைக்கப்படும் இவ்வகை அச்சு எந்திரங்கள் தையல் எந்திரத்தை இயக்குவதுபோல் காலால் மிதித்து இயக்கலாம். மின்சார மோட்டாரைப் பொருத்தி தானாக இயங்கும் வகையிலும் இயக்கலாம்.

இதில் இரு இரும்புத் தட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒன்று செங்குத்தாக எந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இதில் கோக்கப்பட்ட அச்செழுத்துக்கள் நன்கு இறுக்கமாக முடுக்கப்பட்ட இரும்புச் சட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அச்சு எந்திரச் சக்கரங்கள்