பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

குடல்

வுருளைச் சக்கரங்களின் மேல் உறையாக கனமான இரும்பு வடங்களால் பின்னப்பட்ட உறை உண்டு. கூண்டில் இயக்குபவரின் இயக்கத்திற்கேற்க சக்கரங்கள் நகரும். கூண்டோடு இணைந்த ஏணி போன்ற நீண்ட பகுதி உண்டு. இஃது முப்பது முதல் ஐம்பது மீட்டர் உயரமிருக்கும். இதனை. மேல் கீழாகவோ பக்கவாட்டிலோ விரும்பிய பக்கம் திருப்பலாம். கூண்டோடு இணையாகப் பிணைக்கப்பட்டுள்ள நீண்ட கம்பி வடங்கள், ஏணி முனையில் பொருத்தப்பட்ட கம்பி வழியாகக் கொக்கியோடு தொங்கும். தூக்க வேண்டிய அல்லது இறக்க வேண்டிய அல்லது நகர்த்த வேண்டிய பொருளோடு அக்கொக்கியை இணைத்து இயக்குவர்.

கிரேனில் பலவகைகள் உண்டு. சிலவகை கிரேன்கள் நிலையாகப் பொருத்தப்பட்ட நிலையில் இயக்கப்படும். மற்றும் சில அடிச் சக்கரங்களைக் கொண்டு நகரும் வகையில் இயங்கும். மற்றொரு வகை கனமான இரும்பு உத்திரங்கள் மீது அமைக்கப்பட்ட நிலையில் இயக்கப்படும்.

இரும்புப் பாதையினின்றும் விலகிய அல்லது கவிழ்ந்த இரயில் பெட்டிகளை மீண்டும் இருப்புப் பாதையில் நிறுத்த கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கப்பலில் ஏற்ற அல்லது இறக்கக் கூடிய ரயில் பெட்டிகள், கார், லாரிகள் போன்ற வற்றைத் தூக்கக் கூடிய கிரேன்கள் கப்பலிலேயே அமைக்கப்பட்டிருக்கும். இன்று பல மாடிக் கட்டிடங்கள் கட்டப்படும்போது கனமான பொருட்களை மேலே எடுத்துச் செல்ல கிரேன்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.


கீரை : தாவரப் பொருளான கீரைகள் சத்துக்கள் மிகுந்த உணவுப் பொருட்களாகும். விரைந்து வளரும் தன்மை கொண்ட கீரைகள் எளிதாகக் கிடைக்கக் கூடியவையாகும். அன்றாட உணவில் நமக்கு இன்றியமையாது தேவைப்படக்கூடிய தாதுப் பொருட்களையும் கால்சியத்தையும் இரும்புச் சத்தையும் கீரைகள் அளிக்கின்றன. பிற உணவு வகைகளில் இச்சத்துக்கள் மிகக் குறைவான அளவிலேயே கிடைக்கின்றன. எனவே, இச்சத்துக்கள் மிகுந்த கீரைகள் உணவில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. மேலும், பாஸ்வரம், செம்பு, மக்னீசியம் போன்ற சத்துப் பொருட்களும்கூட ஓரளவு கீரைகளில் உள்ளன. மற்றும் புரதச்சத்தும் உயிர்ச்சத்தான வைட்டமின்களும் கீரைகளில் அடங்கியுள்ளன.

சுவையும் சத்தும் பயனுமிக்கக் கீரைகளாக அரைக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி, மணித்தக்காளி, வெந்தயக் கீரை, புதினா, கொத்துமல்லி, கரிவேப்பிலை, முருங்கைக்கீரை போன்றவைகள் கருதப்படுகின்றன. இவற்றில் வைட்டமின் ‘ஏ’ உயிர்ச் சத்து அதிக அளவில் கிடைக்கின்றன.

இன்னும் சிலவகைக் கீரைகள் நோயைத் தீர்க்கும் தன்மையுடையனவாக உள்ளன. அவற்றுள் கீழாநல்லி போன்றவை குறிப்பிடத் தக்கவைகளாகும். கீரைகளை எளிதாக வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் வளர்த்துப் பெறலாம். குறைந்த செலவில் எளிதாகப் பெறக்கூடிய கீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் நாம் நலமாக வாழ வழியேற்படும்.


குடல் : நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பு குடலாகும். நாம் உண்ணும் உணவு செல்லும் உணவுப் பாதையின் பெரும் பகுதியாக

அமைந்திருப்பது குடல். சீரணித்தது போக மீதமுள்ள கழிவுப் பொருட்கள் குடல்