பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுழல் எந்திரம்

5

சுழலும்போது இது முன்னும் பின்னுமாகச் சென்று விடும். அப்போது மை உருளைகள் இதன்மீது மேலும் கீழும் ஓடி, எழுத்துக்கள் மீது மை தடவும். கிடையாக அமைக்கப்பட்டிருக்கும் மற்றொரு தட்டில் அச்சிடவேண்டிய

தட்டச்சுப் பொறி (பிளேட்டன்)


தாள் வைக்கப்பட்டிக்கும். எந்திரம் இயங்கும் போது அச்செழுத்துப் பொருத்தப்பட்டிருக்கும் தட்டு தாள் மீது பதிந்து மீளும். அப்போது தாளில் அச்சு பதியும்.

அச்செழுத்துப் பலகை தாளிலிருந்து மீண்ட பின் அச்சுப்பதிந்த தாளை உடனடியாக அங்கிருந்து அகற்றி விட்டு வேறு தாளை அங்கு அச்சிட வைக்க வேண்டும். இவ்வாறு மணிக்கு ஆயிரம் படிகள் அச்சிடலாம்.

உருளை எந்திரம் : 'சிலிண்டர்' என்று அழைக்கப்படும் இது தட்டு எந்திரத்தை விடப் பெரியதாகும். இதில் அச்செழுத்து முடுக்கப்பட்ட சட்டம் கிடையாகக் கிடத்தப்பட்டிருக்கும். நன்கு பொருத்தப்பட்ட அது முன்னும் பின்னுமாகச் சென்று வரும். பின்னே செல்லும் போது அங்குள்ள மை உருளைகள் எழுத்து மீது மை தடவும். முன்னோக்கி வரும்போது அங்கு தாள் சுற்றிய உருளை சுழலும். அப்போது அவ்வுருளையோடு இணைந்த தாளில் அச்சு பதியும். பின் உருளை அவ்விடத்தை விட்டு அகன்றவுடன் அதனோடு இணைந்திருந்த அச்சுப் பதிந்த தாள் தனியே பிரிந்துவிடும்.மீண்டும் உருளையில் புதியதாள் சுற்றப்படும். இதில் பெரிய தாள்களும் கூட அச்சிட முடியும். அதாவது ஒரே சமயத்தில் 16 பக்கங்களோ 32 பக்கங்களோ அச்சிட இயலும். இந்த உருளை எந்திரங்கள் மின்

நின்று சுழலும் உருளை அச்சுப் பொறி

விசையால் மட்டுமே இயங்கும். இதில் ஒரே சமயத்தில் மணிக்கு இரண்டாயிரம் படிகளுக்கு மேல் அச்சிட முடியும்.

சுழல் எந்திரம் : 'ரோட்டரி' என்று கூறப்படும் இவ்வகை அச்சு எந்திரத்தில்பெரும்பாலும் பத்திரிகைகளே அச்சிடப்படுகின்றன. இதில் முடுக்கப்பட்ட அச்செழுத்துத் தட்டுகள் சம

கழல் எந்திாம் (ரோட்டரி)

தள வடிவில் இல்லாது உருளைவடிவில இருக்கும். இரு எழுத்து உருளைகளுக்கு இடையே