பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

கோபால்ட்

கலைகளை மூன்றாண்டுகள் கற்றுத் தேர்ந்தார். பின் இத்தாலி சென்று போலோனியா

சூரிய மண்டலம்

பல்கலைக்கழகத்தில் வானவியல் படிப்போடு கிருத்துவ சமயச் சட்ட நுட்பங்களையும் படித்தார். வானவியல் படிப்பிலும் ஆராய்ச்சியிலும் பேரார்வம் கொண்டார். தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து வந்தார்.

முன்பு தாலமி போன்றவர்கள் சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்றும் பிரபஞ்சத்தின் மையம் பூமி என்றும் கூறியிருந்தனர். பலரும் அன்றுவரை அதையே நம்பி வந்தனர். ஆனால், கோப்பர்னிக்கஸ் 1497ஆம் ஆண்டில் தாலமியின் கொள்கை தவறானது என்றும் பூமியே சூரியனைச் சுற்றுகிறதென்றும் பிரபஞ்சத்தின் மையப் பகுதி சூரியனே என்பதையும் ஆதாரபூர்வமாக நிறுவினார். பூமி சூரியனைச் சுற்றும் அதே நேரத்தில் தன்னைத் தானேயும் சுற்றிக் கொள்கிறது என்பதை உலகுக்கு உணர்த்தினார். பூமியைப் போன்றே பிற கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையையும் கண்டறிந்து கூறினார்.

கோப்பர்னிக்கசின் வானவியல் ஆராய்ச்சி உண்மைகள் தான் சார்ந்த கிருத்துவ சமயக் கருத்துக்களுக்கு முரணாக இருப்பதை உணர்ந்தே இருந்தார். ஆயினும் சமயவாதிகளால் தனக்குத் துன்பம் ஏற்படலாம் என்று எண்ணினார். இதனால் தன் ஆராய்ச்சிக் கருத்துக்கள் அடங்கிய கையெழுத்துப் பிரதியை எரித்துவிட முயன்றார். ஆயினும், அவரது நண்பர்கள் எரிக்க விடாமல் தடுத்துவிட்டனர். பின்னர், அக்கையெழுத்துப் பிரதியை நூலுருவாக்க விரும்பி அச்சேற்றினர். நூல் வெளியான அன்று கோப்பர்னிக்கஸ் மறைவெய்தினார்.

அவரது நூல் அவருக்குப் பின்னால் வந்த வானவியல் ஆய்வாளர்களுக்கு அரிய வழிகாட்டி நூலாக அமைந்தது. பின்னர் வந்த வானவியல் நூல்கள் யாவும் கோப்பர்னிக்கசின் கண்டுபிடிப்புகளை மெய்ப்பிப்பனவாக அமைந்தன.


கோபால்ட் : ஜெர்மன் மொழியிலுள்ள "கோபால்ட்’ (Kobold) எனும் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இது ஒரு முக்கியமான உலோகமாகும். இஃது வெள்ளியைப்போல் வெள்ளை நிறமுடைய உலோகமாகும். 1785இல் பிராண்ட் என்பவரால் கண்டறியப்பட்ட இவ்வுலோகம் மிகவும் கடினத்தன்மை வாய்க்கப் பெற்றதாகும். சொல்லப்போனால் இரும்பையும் நிக்கலையும் விட உறுதி வாய்ந்ததாகும். இதனால் இவ்வுலோகத்தைக் கம்பியாக நீட்டவோ தகடாக அடிக்கவோ இயல்வதில்லை. எனவே, இதனை கம்பியாக நீட்ட அல்லது தகடாக அடிக்க இவ்வுலோகத்தோடு கார்பன் கலந்து பயன்படுத்துகிறார்கள். அப்போது அதனுடைய கடினத் தன்மை குறைந்து விடுகிறது.

கோபால்ட் உலோகத்தோடு குரோமியத்தைக் கலந்தால் மேலும் கடினத்தன்மை ஏற்படுகிறது. இத்தகைய கடினமிக்கக் கூட்டுக் கலவையைக் கொண்டு பிற உலோகங்களை வெட்டக்கூடிய கருவிகளைச் செய்து பயன்படுத்துகிறார்கள்,

கோபால்ட் உலோகத்தோடு டங்ஸ்டன், குளேபியம், மாலிப்டினம் ஆகிய உலோகக் கலவையைச் சேர்த்துச் செய்யப்பட்ட ஸ்டெல் வைட் என்ற உலோகக் கலவையைக் கொண்டு வெட்டுக் கருவிகளை செய்கிறார்கள். இத