பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாணைக்கல்

151

இந்நோயை எச்சிலை சோதனை செய்தும், எக்ஸ் கதிர் எனும் ஊடுகதிர் சோதனை

காசநோய்க் கிருமிகள் (42,000 மடங்கு பெரிதாக்கப்பட்டது)

மூலமும் எளிதாகக் கண்டறிய முடியும். ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிந்தால் உரிய மருந்துகள் மூலம் குணப்படுத்துதல் எளிது. நோயைக் கவனியாதுவிட்டால் நோயாளி விரைந்து மரணமடைய நேரிடும்.


சர்க்கரை : நம் உடலுக்கு இன்றியமையாது தேவைப்படும் உணவுப் பொருட்களில் முக்கியமானது சர்க்கரையாகும். இது ஆங்கிலத்தில் ‘சுகர்’ என அழைக்கப்படுகிறது. இச் சொல் ‘சுக்ரோஸ்" என்பதிலிருந்து வந்ததாகும்.

இது கார்போஹைட்ரேட்டுகள் எனப்படும் கரிமச்சேர்ம வகையைச் சார்ந்ததாகும். இதில் காணப்படும் சர்க்கரை தொகுதிகள் காணப்படும் பிணைப்பின் வகை ஆகியவைகளைப் பொறுத்து பல்வேறு பண்புகளை உடைய சர்க்கரைத் தொகுதிகள் கிடைக்கப் பெறுகின்றன.

சர்க்கரை மிக எளிதாகச் செரிமானம் அடையக்கூடிய உணவு மட்டுமன்று; உடலுக்குத் தேவையான சக்தியையும் வெப்பத்தையும் தரவல்லதுமாகும்.

கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவற்றின் குறிப்பிட்ட விகிதத்தில் கூடி உருவாகும் சர்க்கரையைப் பல்வேறு பொருட்களிலிருந்து பெறுகிறோம். நாம் சாதாரணமாக உபயோகிக்கும் சர்க்கரையை கரும்பு, பீட்ருட் கிழங்கு போன்றவைகளிலிருந்து பெறும் "சுக்ரோஸ்’ எனும் இனிப்புப் பொருளிலிலிருந்து தயாரிக்கிறோம். பழங்களிலிருந்து கிடைக்கும் 'பிரக்ட்டோஸ்' மற்றும் காய்கறி, தானியம் போன்றவற்றிலிருந்து சர்க்கரைச் சத்தைப் பெருமளவில் பெறுகிறோம். பாலிலிருந்து 'லாக் டேர்ஸ்’ எனும் சர்க்கரைச் சத்துக் கிடைக்கிறது.

அமெரிக்காவிலும் கனடாவிலும் 'மேப்பிள்' எனும் ஒருவகை மரம் உண்டு. இம் மரத்தின் அடிப்பகுதியில் துளையிட்டால் அதன் வழியே ஒருவகைப் பால் வெளிப்படும்.இப்பாலைச் சேகரித்துக் காய்ச்சி சர்க்கரை தயாரிக்கிறார்கள். உலகில் கரும்பு விளையும் நாடுகளில் இந்தியா முதன்மையானதாகும்.


சாணைக்கல் : கார்போரண்டம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சாணைக்கல் கார்போரண்டம் எனும் பொருளாலானதாகும். இது ஒரு சிலிகன் கார்பைடு எனும் சேர்மமாகும். இது மிகவும் கடினத்தன்மை உடைய பொருளாகும். எந்த வித வினைப்பான்களினாலும் பாதிக்கப்படாதவை. அதிக வெப்பத்தை தாங்கும்பண்புடையதாதலால் உலோகங்களை உருக்கும் மூசையை தயாரிக்கவும் பயன்படுகிறது. இது கத்தி. கத்தரிக்கோல், அரிவாள் போன்றவைகள் மழுங்கிய சமயத்தில் சாணைப்பிடித்துக் கூர்மையாக்கப் பயன்படுகிறது. சாணைக்கல்லை வேகமாகச் சுழலச் செய்து, அதன்மீது கூர்மையாக்கவேண்டிய பொருளை வைக்கும்போது எதிர் உராய்வின் மூலம் கூர்மை பெறுகிறது.

கடினத்தன்மை மிக்க சாணைக்கல், கார்பனையும் சிலிக்கனையும் சேர்த்துச் செய்யப்படுகிறது. இதன் வேதியியற் பெயர் 'சிலிக்கன் கார்பைடு' என்பதாகும். சிலிக்கன் டை ஆக்சைடு எனப்படும் வெண் மணலையும் கார்பன் எனும் கல்கரியையும் சேர்த்துக் கலவையாக்கி உயர் வெப்பத்தில் மின் உலையில் வைத்துச் சூடாக்கி இஃது தயாரிக்கப்படுகிறது. 1891 ஆண்டில் அமெரிக்கரான அச்சஸன் என்பவர்