பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

சுரப்பிகள்

யும் படங்களும் இடைவெளியின்றித் தொடர்ந்து காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தெரிகின்றன.

திரைப்படக் கருவி மூலம் காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்படுவது போன்றே பேசும் பேச்சுக்களும் பாடல்களும் ஒலிப்பதிவுக் கருவி மூலம் ஒலிப்பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு தனித்தனியே பதிவு செய்யப்பட்ட காட்சி பிலிம்களையும் ஒலிப்பதிவு பிலிம்களையும் படத் தொகுப்பாளர் விரும்பிய வண்ணம் இணைத்து, அதை ஒரே பிலிமில் அமையுமாறு பிரதி எடுப்பார். இப்பிரதியை புரொஜக்டர் கருவி மூலம் திரையில் காட்டுவார்கள்.

தொடக்கக் காலத்தில் கறுப்பு-வெள்ளைத் திரைப்படங்கள் மட்டும் எடுக்கப்பட்டன. இன்று கண்ணுக்கு குளுமையான பல வண்ணங்களில் வண்ணப்படமாகத் தயாரிக்கப்படுகின்றன. இக்காட்சியைக் காணும்போது இயற்கையான தோற்றங்களை முழுமையாகத் திரையில் கண்டு மகிழ முடிகிறது. இன்று 70 மி.மீ. மற்றும் 'மாக்ஸ்’ (Max)போன்ற பேருருக் காட்டும் திரைப்படங்களும் காட்டப்படுகின்றன.

இயக்கப் படத்தை முதன் முதலாக பலரும் பார்க்கும் வண்ணம் உருவாக்கிய பெருமை சி. பிரான்சிஸ் ஜென்கின்ஸ் எனும் அமெரிக்கரையே சாரும்.

உலகிலேயே சினிமாத்தொழிலில் சிறப்புற்று விளங்கும் நாடு அமெரிக்காவாகும். அடுத்தபடியாக இத்தொழிலில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது.


சீரணமண்டலம் : நாம் உயிர் வாழவும் உடலின் உறுப்புக்கள் அனைத்தும் சீராக இயங்கவும் சத்து வேண்டும். இச்சத்தை உணவு மூலம் பெறும்போதும் அவ்வுணவைச் சீரணித்துச் சத்தாக மாற்றும் பணியைச் செய்யும் உறுப்புகளடங்கிய பகுதியே 'சீரண மண்டலம்’ ஆகும். அவ்வுறுப்புகள் வாய், உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், மலக்குடல் ஆகியனவாகும்.

வாயில் போடப்படும் உணவுப் பொருட்கள் வாயில் ஊறும் உமிழ்நீரால் ஓரளவு கரைக்கப்படுகிறது. பின் அஃது உணவுக் குழல் வழியாக இரைப்பையை அடைகிறது. அங்கு கணையத்திலிருந்து ஊறும் கணைய நீரும் பித்தப் பையிலிருந்து சுரக்கும் பித்த நீரும் திட உணவை திரவ நிலைக்கு மாற்றுகின்றன. திரவ வடிவ உணவுப்பொருட்கள் பின் சிறு

சீரண மண்டலம்

குடலைப் போய்ச் சேருகிறது. சிறு குடலின் உட்சுவர்களில் சின்னஞ்சிறு வடிவில் நீட்டிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மொட்டுகள் இத்திரவ உணவிலிருந்து சத்தைத் தனியே பிரித்தெடுத்து இரத்தத்தில் கலக்கின்றன. உடலெங்கும் விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் இரத்தம் சத்தை அளவாகப் பிரித்தளித்து சக்தியூட்டுகின்றன.

நாம் உண்ணும் உணவு அனைத்துமே சத்தாகவோ சக்தியாகவோ மாறுவதில்லை. அவற்றில் சீரணிக்கப்படாத சிறு பகுதி கழிவுகளாக சிறு குடலிலிருந்து பெருங்குடலை அடைகின்றன. பெருங்குடலாகிய மலக்குடல் மூலம் மலமாக வெளியேற்றப்படுகிறது.


சுரப்பிகள் : இவை ஆங்கிலத்தில் “கிளாண்ட்ஸ்’ (Glands) என்று அழைக்கப்படுகிறது. உடல் உறுப்புகள் செவ்வனே இயங்குவதற்கும் உண்ணும் உணவு சக்தியாக மாறுவதற்கும் உடலுக்குச் சில வேதியியற் பொருட்கள் தேவைப்படுகின்றன. இவ்வேதி