பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூரிய மண்டலம்

159

யியற் பொருட்களைச் சுரப்பனவே சுரப்பிகள் என அழைக்கப்படுகின்றன.

சுரப்பிகள்

வாயில் உமிழ்நீர்ச் சுரப்பிகளிலிருந்து உமிழ் நீர் சுரக்கிறது. இச்சுரப்பிகள் நாக்கின் அடிப்பகுதியிலும் கன்னத்தின் உள் பக்கத்திலுமாக அமைந்துள்ளன. உண்ணும் உணவில் உமிழ் நீர் கலக்க உணவு செரிப்பதற்கேற்ப கூழ் நிலையில் பதமடைகிறது. இதனால் உணவு எளிதாக சீரணமாக இயல்கிறது.

உமிழ் நீர்ச் சுரப்பி போன்றே வேறுசில சுரப்பிகளும் உடலில் வேறுபல பகுதிகளில் உள்ளன. அவற்றுள் பிட்யூட்டரிச் சுரப்பியும் ஒன்று. இது மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இச்சுரப்பி நீர் அளவாகச் சுரந்தால் நம் உயரமும் சாதாரண நிலையில் இருக்கும். அளவுக்கு அதிகமாகச் சுரக்கும் நீரின் அளவிற்கு அதிகமான வளர்ச்சி ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். வேறுசில சுரப்பிகள் சுரப்பதற்கும் பிட்யூட்டரி சுரப்பி காரணமாய மைந்துள்ளது. ஏனெனில் சுரப்பிகள் யாவும் தனித்தனியே ஒரு வகையில் ஒருங்கிணைந்தே செயல்படுகின்றன. இதனால் உடல் வளர்ச்சியும் நலமும் ஒருங்கே விளைகின்றன. உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் உரிய முறையில் வெளியேறுவதற்கும் சுரப்பிகளே காரணம். கண்ணீர்ச் சுரப்பிமூலம் கண்ணீர் வெளிப்படுகிறது. கண்ணீர் அடிக்கடி வெளிப்படுவதால் கண்கள் தூய்மையாகின்றன.

தோலில் இருக்கும் வியர்வைச் சுரப்பிகள் போல செய்வதால்தான் இரத்தத்திலிருந்து கழிவுகள் வியர்வையாக வெளியேற்றப்படுகின்றன.


சூரிய மண்டலம் : சூரியனும் கிரகங்களும் துணைக் கோள்களும், வால் நட்சத்திரம், மற்றும் எரி நட்சத்திரங்களும் அடங்கிய பெருந்தொகுதியை சூரிய மண்டலம் ஆகும். ஆகாய கங்கையாலும், நட்சத்திர மண்டலத்தின் ஒரு சிறு பகுதியாக சூரிய மண்டலம் அமைந்துள்ளது.

இம் மண்டலத்தின் தலையாயதாக அமைந்துள்ள சூரியனைச் கற்றியே அனைத்துக் கிரகங்களும் அமைந்துள்ளன. இவை சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனையே சுற்றி வருகின்றன. அவ்வாறு சுற்றி வரும் கிரகங்கள் மொத்தம் ஒன்பது எனக் கண்டறிந்துள்ளனர். மேலும் கிரகங்கள் ஏதும் உள்ளனவா எனத் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.

'நவகிரகங்கள்’ என அழைக்கப்படும் ஒன்பது கிரகங்களில் புதன், வெள்ளி (இதைச் சுக்கிரன் என்றும் அழைப்பர்) பூமி, செவ்வாய் வியாழன் (இது குரு என்றும் குறிக்கப்படும்). சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ கிரகம் ஆகியன அடங்கும். இவற்றுள் புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. புளுட்டோ கிரகம் நீண்ட நெடுந் தொலைவிலுள்ளது. கிரகங்கள் அனைத்தும் நீள்வட்டப் பாதையில் ஒரே திசையில் நியதிப்படி சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரிய மண்டத்தில் உள்ள கிரகங்களில் சூரியன் மட்டுமே இயற்கையாக ஒளிவீசிப் பிரகாசிக்கக் கூடிய ஒளிரும் கோளம். மற்ற கிரகங்களுக்கு இயற்கையில் தானாக ஒளிவீசும் தன்மை இல்லை. இவை ஒளிராக் கோளங்களாகும். இவை சூரிய ஒளியைப் பெற்று அவ்வொளியையே திரும்பப் பிரதிபலிக்கக்கூடியவைகளாகும்.