பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

சூரியன்

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் புதன், வெள்ளி, கிரகங்களைத் தவிர்த்து மற்றவற்றிற்குத் துணைக்கோள்கள் உள்ளன. பூமிக்குத் துணைக்கோள் சந்திரன் ஆகும்.

சூரியனின் ஈர்ப்பாற்றலால் கிரகங்கள் விலகிச் சென்றுவிடாமல் சூரியனையே சுற்றிச் சுற்றி வருகின்றன. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதோடு பூமியையும் சுற்றி வருகின்றது.

சூரியன் புதன் வெள்ளி பூமி செவ்வாய் நுண்கோள்கள் வியாழன் சனி யுரேனஸ் நெப்டியூன் புளுட்டோ

சூரிய மண்டலத்தின் தோற்ற வரலாறு சுவையானதாகும். சூரியனுக்கு அருகே வந்த நட்சத்திரம் ஒன்றின் ஈர்ப்பாற்றலால் ஆவி வடிவிலான சூரியனின் ஒரு பகுதி மாதுளம் பழத்தின் முனைப்பகுதி போன்று கூம்பி எழுந்தது. இப்படி பருத்து எழுந்த பகுதி தனியாக சூரியனிடமிருந்து பிரிந்து சென்றது. இவை பின்னர் குளிர்ந்து தனித்தனிப் பகுதிகளாயின. இத்தனிப் பகுதிகளே கிரகங்கள். இவை முற்றிலும் குளிர்ச்சியடையுமுன் மீண்டும் சூரியனுக்கருகில் செல்ல நேர்ந்தபோது அக்கிரகங்களிலிருந்து மேலும் சில பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்து சென்றன. பின்னர் இவைகள் துணைக் கோள்களாயின.

இவை எந்தக் கிரகத்திலிருந்து வெளியேறினவோ அந்தக் கிரகத்தையே சுற்றிவர ஆரம்பித்தன. இவை அந்தந்த கிரகங்களின் துணைக்கோள்களாக அழைக்கப்பட்டன. இத்தகைய துணைக்கோள்கள் பூமிக்கு ஒன்று, செவ்வாய்க்கு இரண்டு, நெப்டியூனுக்கு இரண்டு. யுரேனசுக்கு ஐந்து, சனிக்கு ஒன்பது, வியாழனுக்குப் பன்னிரண்டு எனத் துணைக் கோள்கள் அமைந்துள்ளன. புளுட்டோவிற்குத் துணைக்கோள்கள் இருப்பதாகத் தெரியவில்லை.


சூரியன் : 'கதிரவன்', 'ஞாயிறு' என்றெல்லாம் அழைக்கப்படும் சூரியன் ஒரு நட்சத்திரம் ஆகும், இது பூமிக்கு அருகில் உள்ள நட்சத்திரமாகவும் பிற நட்சத்திரங்களைவிடப் பெரியதாகவும் உள்ளது. ஒளி மிகுந்து தோன்றுகிறது. பிற நட்சத்திரங்கள் வெகு தொலைவில் உள்ளதால் அவை அளவில் சிறியதாகக் காணப்படுகின்றன. சூரியன் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் இயற்கையிலே மிகுந்த ஒளி கொண்டு ஒளிரும் கோளங்களாகும்.

சூரியக்கோளம் பூமியிலிருந்து சுமார் 1½ கோடி கி.மீ. தூரத்தில் உள்ளது. சூரியனின் குறுக்கு விட்டம் சுமார் 14 இலட்சம் கி.மீ. ஆகும். நில உலகைவிடச் சுமார் பத்து இலட்சம் மடங்கு சூரியன் பெரியதாகும்.

சூரியக் கதிர்கள் வெப்பமிக்கவையாகும். காரணம் சூரியன் பலவகையான வெப்ப வாயுக்களால் ஆனதாகும். சூரியனின் மேற்பரப்பில் 12,000 வெப்பநிலை நிலவுவதாகக்

சூரியன்

கணக்கிட்டிருக்கிறார்கள். சூரியனின் மத்தியப் பகுதியில் சுமார் நான்கு கோடி டிகிரி வெப்பமிருப்பதாகக் கூறப்படுகிறது. சூரியனைச்