பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

செம்பு

டாகும். அவ்விடத்தை நோக்கிப் பாயும் காற்று, பூமிச் சுழற்சி காரணமாகச் சுழன்று பாயும். இதுவே சூறாவளிச் சுழற்காற்று, பெரும் புயல் வடிவில் கடலிலிருந்து தரையை நோக்கிப் பாயும். இப் புயற்காற்றால் பேரலைகள் உருவாகும், அவை கடற்கரைப் பகுதியில் பாய்ந்து வெள்ளக் காடாக்குவதும் உண்டு. இப்புயலின் போது வரும் கருமேகங்கள் பெரு மழையாகப் பெய்யும். இப்புயல் காற்றுக்கு ஒரு

(செய்தித் தொடர்பு கோளகளின் ஆறு பயன்களைக் காட்டும் வரைபடம்

மையம் இருக்கும். அஃது 'புயற்கண்’ அல்லது 'சுழி' எனக் கூறப்படுகிறது. இச் சூறாவளிப் புயக்காற்று மணிக்கு 50 முதல் 800 கி.மீ. வேகத்தில் வீசி மரங்களையும் வீடுகளையும் சேதமடையச் செய்யும்.

இத்தகைய சூறாவளிப் புயல் இந்தியாவைப் பொறுத்தவரை கிழக்குக் கடற்கரையிலேயே உருவாகி வீசுகின்றன. இதனால் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியும் பங்களாதேசின் கடற்கரைப் பகுதியும் பாதிப்புக்காளகின்றன. நவம்பர் முதல் மேவரை இத்தகைய சூறாவளிக்காற்று தென் இந்தியாவின் மேற்குக்கரைப் பகுதிகளிலிருந்து வடபகுதியில் வீசுவதுண்டு.

காற்றின் வேகத்தைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களால் இது அழைக்கப்படுகிறது.


செம்பு : மனித வாழ்வில் மிகவும் பழங்காலம் தொட்டு பழக்கத்தில் உள்ள உலோகம் செம்பாகும். ரோமானியர்களால் குப்ரம் (Cuprum) என்று அழைக்கப்பட்டது. அமெரிக்கா, மெக்சிகோ, ரஷியா, சீனா மற்றும் சிலியிலும் தனி உலோகமாகக் கிடைக்கிறது. இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, பீஹார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கிடைக்கிறது. பெரும்பாலும் அது சல்பைடு கனிமமாகிய காப்பர் கிளான்ஸ் கனிமத்திலிருந்து பெறப்படுகிறது.

நம் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படும் உலோகங்களில் செம்பும் ஒன்றாகும். இதை 'தாமிரம்'என்றும் அழைப்பார்கள். கலப்பற்ற தூய செம்பின் நிறம் செந்நிறமாகும். இது பார்ப்பதற்கு பளபளப்பு மிக்கதாகக் காணப்படும். இரும்பைவிடக் கனமான இது 18560K வெப்பத்தில் மட்டுமே உருகும். இவ்வுலோகம் மிக எளிதாக மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தும். இவ்வுலோகம் துருப்பிடிப்ப