பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோடியம்

165

செலுத்தியது. அதன்பின் பல செயற்கைக் கோள்களை அமெரிக்காவும் ரஷ்யாவும்

செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களைப் பெறும் ரேடார் கருவிகள்

போட்டி போட்டுக்கொண்டு விண்ணில் செலுத்தின. இப்போட்டியில் ஃபிரான்சும் வேறு சில நாடுகளும் கலந்து கொண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் அனுப்பின.

இந்தியா முதன் முதலாக 'ஆரியபட்டா’ எனும் செயற்கைக் கோளை 1975ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. அதன்பின் பாஸ்கரா - ரோஹினி, ஆப்பிள், பாஸ்கரா இன்சாட்-இன்சாட்-பி என்ற பெயர்களில் பல செயற்கைக் கோள்களை விண்ணிற்கனுப்பி உலகை வலம் வரச் செய்தது.

இச் செயற்கைக் கோள்கள் விண் ஆய்வோடு செய்தித் தொடர்புக்காகவும் நிலவுலகம் பற்றிய வேறுபல தகவல்களைத் திரட்டுவதற்காகவுமே அனுப்பப்பட்டன. இச் செயற்கைக் கோள்கள் மூலம் இன்று தொலைபேசி வசதிகளையும் வானெலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் எளிதாகப் பெற முடிகிறது. செயற்கைக் கோள்கள் மூலம் நில, நீரியல் ஆய்வுகளும் நிகழ்த்தப்படுகின்றன. பூமியினுள் புதைந்துள்ள பல்வேறு வகையான கனிமப் படிவுகளையும் அறிந்து கொள்ளமுடிகிறது. புயல், மழை விவரங்களையும் முன்கூட்டியே அறிய இயல்கிறது. எல்லா வகையிலும் இன்றைய மனிதகுல வளர்ச்சிக்கும் செயற்கைக் கோள்கள் மாபெருந் துணைபுரிந்து வருகின்றன எனலாம்.


சோடியம் : இது ஒரு தனிமம் ஆகும். இது கார உலோகமாகும். 1807ஆம் ஆண்டு டேவி (Davy) என்பார் இத் தனிம உலோகத்தை உருக்கிய சோடியம் ஹைட்ராக்சைடை மின் பகுப்பு மூலம் பிரித்தெடுத்தார். நீர்ம அம்மோனியா திரவத்தில் கரைந்து நீலநில கரைசலைத் தரும். செயற்கை ரப்பர் தயாரிக்கும் தொழிலில் இது ஒரு வினை வேக மாற்றியாக பயன்படுகிறது. பாதரசத்தோடு கலந்த சோடியம் ரசக் கலவை ஒரு சிறந்த ஒடுக்கியாக பயன்படுகிறது. சோடியத்தோடு குளோரின் வாயு