பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

அச்சுக்கோத்தல்

அறை வீதம் அமைந்திருக்கும். அச்சுக் கோப்பவர் அவ்வறைகளிலிருந்து எழுத்துக்களைப் பொறுக்கிச் சொற்களையும் சொற்றொ

கூட்டன்பர்க்

டர்களையும் அமைப்பர். எழுத்து அடுக்கப் பயன்படும் கருவி 'அச்சுக் கோப்பான்’ (Composing Stick) என அழைக்கப்படுகிறது. இவ்வாறு கோக்கப்பட்ட அச்செழுத்துக்கள்

கையால் அச்சுக்கோத்தல்

நீள் சதுரத் தட்டில் வைத்துச் சேகரிக்கப்படும். இதற்கு அச்சுத்தட்டு (Galley) என்று பெயர். பின், தட்டு நிறைந்ததும் அதன் மீது மை தடவி தாளைப் பதித்து எடுத்துப் பிழை திருத்தம் செய்வர். பின்னர் பக்கங்களாக அமைக்கப்படும். இவ்வாறு பதினாறு பக்கங்கள் ஆனவுடன் ஒரு 'ஃபாரம்' அல்லது படிவமாக அச்சிடப்படும்.

இம்முறையே நீண்டகாலமாக இருந்து வருகிறது. கையினால் எழுத்துக்களை எடுத்து அச்சுக் கோக்க நீண்ட நேரமாகிறது. சக்தியும் அதிகம் செலவாகிறது. பத்திரிகைகளுக்கு விரைந்து அச்சுக்கோப்பது அவசியமாகிறது. எனவே, நீண்ட ஆய்வுக்குப் பின் அச்சுக்கோக்கப் புதிய முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. 1878ஆம் ஆண்டில் ஆட்மர் மென்கென்

அச்சு எழுத்து எந்திரம்

தாலர் என்பவர் 'வரி அச்சு' (Linotype)முறைளைக் கண்டறிந்தார். இம்முறை மூலம் செய்தியை வரிவரியாக அச்சு வார்க்க இயலும். இதனை ஒரு இயந்திரமே செய்யும்.

பின்னர் 1587ஆம் ஆண்டில் டோல்பெர்ட் என்பவர் தனி அச்சு எழுத்துருக்கு எந்திரம் (Monotype) ஒன்றைக் கண்டுபிடித்தார். தட்