பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திசு

171

இரும்பு, தங்கம் போன்ற திடப்பொருட்களாக உள்ளன. பெரும்பாலான தனிமங்கள் இயற்கையாகத் தனிப்பொருளாகக் கிடைப்பதில்லை. மற்ற தனிமங்களுடன் கலந்த கலவையாகவே கிடைக்கின்றன. இவற்றைத் தனியே பிரித்தே தனிமமாகப் பெற முடிகிறது. உலகில் 100-க்கு மேற்பட்ட தனிமங்கள் இது வரை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றிற்குத் தனித்தனி அணுஎடை கணிக்கப்பட்டுள்ளது. அணுஎண் என்பது தனிமத்தின் உட்கருவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.

எனவே உட்கருவேதியல் முறைப்படி ஒவ்வொரு தனிம உட்கருவிலும் புரோட்டான்களை நுழைத்து புது செயற்கை தனிமம் உருவாக்கப்படுகிறது. இவ்விதம் பெறப்படும் தனி மங்கள் நிலைப்புத்தன்மை குறைவாக உள்ளனவாகும்.


தாதுக்கள் : ‘மினரல்ஸ்' (Minerals) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தாதுக்கள் கரியற்ற இயற்கைப் பொருட்களாகும். பிற பொருட்களை உருவாக்குவது போன்று தாதுக்கள் எதையும் நம்மால் உருவாக்க இயலாது. அவை ஆயிரக்கணக்கில் தாதுப்பொருட்கள் உள்ளனவெனினும் சுமார் 150 தாதுக்கள் மட்டுமே முக்கியத்துவமுடையனவாகப் பயன்பட்டு வருகின்றன. இவைகளின் பல்வேறு தன்மைகளைக் கொண்டு இனம் பிரித்தறிய முடிகிறது. தாதுப் பொருட்கள் தனித்தும் பிற பொருட்களோடு கலந்தும் கிடைக்கின்றன.

தாதுக்கள் பல்வேறு நீளங்களில் அமைந்துள்ளன. அதற்குக் காரணம் அவற்றில் படித்துள்ள மாசுகளே யாகும். தாதுக்களின் கடினத் தன்மையின் அடிப்படையில் அவற்றிற்குத் தனித்தனி எண்கள் கொடுக்கப்பட்டுள்

குரோமைட் போன்ற சில தாதுக்கள் காந்தத் தன்மை கொண்டவைகளாக உள்ளன. சில தாதுப் பொருட்கள் அணு ஆற்றல் உள்ளவைகளாக அமைந்துள்ளன. யுரேனியம், தோரியம் போன்றவை இத்தகையனவாகும்.

மனித வாழ்க்கைக்குப் பல்வேறு வழிகளிலும் தாதுப் பொருட்கள் பயன்பட்டு வருகின்றன. குடியிருப்புக்கான கட்டிடங்களை உருவாக்கவும், அணிமணிகளைச் செய்து அணிந்து மகிழவும், சிலவகைத் தாதுப் பொருட்களை உணவில் கலந்து உண்பதால் உடல் வளர்ச்சி பெறவும் உதவுகின்றன.

பெரும்பான்மையான தனிமங்கள் அவற்றின் தாதுக்களிடமிருந்து வேதியல் முறையில் பிரித்தெடுக்கப்படுகின்றன. பூமியின் புறப்பரப்பிலோ அல்லது பரப்பின் கீழோ அமைந்திருக்கும். சுருங்கக்கூறின் இவ்வகைதாதுக்கள் மாசு கலந்த கலப்புச் சேர்மமாகும். இவற்றில் உள்ள மாசுகள் முறைப்படி அகற்றப்பட்டு உலோகவியல் முறையில் தனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.


திசு : நம் உடலின் அடிப்படைக் கூறுக்ளாகிய உயிரணுக்களின் கோவையே 'திசு’ (Tissue) ஆகும். மனித உடல் மட்டுமல்ல, பிற உயிரினங்களும் தாவரங்களும்கூட திசுக்களால் ஆனவையே யாகும்.

சாதாரணமாகத் திசுக்களில் பலவகைகள் உள்ளன. அவற்றில் நான்கு வகைத் திசுக்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவமுடையனவாகும். அவை எப்பிதீலியத் திசுக்கள் என அழைக்கப்படும் சவ்வுப் படலத் திசுக்கள், நரம்புத் திசுக்கள், தசைத் திசுக்கள். இணைப்புத் திசுக்கள் ஆகும். எப்பிதீலியத் திசுக்கள் உடலின் போர்வைபோல் அமைந்துள்ள தோலில் அடிப்புறப் பகுதியிலும் மூக்கு, வாய், வயிறு போன்ற பகுதிகளில் படர்ந்துள்ள சவ்வுப் படலங்களிலும் அமைந்துள்ளன. நரம்புகளில் அமைந்துள்ள திசுக்கள் மற்ற திசுக்களைவிடச் சற்று நீளமானதாகும். அவை மென்மைத் தன்மை கொண்ட மெல்லிய திசுக்களாகும். உடலின் மிக முக்கிய உறுப்புகளான கைகளையும் கால்களையும் நாம் விரும்பும் வண்ணம் கட்டவும் நீட்டவும் துணை செய்யும் திசுக்கள் தசைத் திசுக்களாகும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் இணைத்து முறைப்படி இயங்க உதவி செய்யும் திசுக்கள் இணைப்புத் திசுக்கள் ஆகும்.

எதிர்பாராத நிலையில் நாம் விபத்துக்கு ஆளாக நேரும்போது காயங்கள் ஏற்படலாம் அல்லது உடற் பகுதிகளில் சேதமோ பழுதோ உண்டாகலாம். அப்போது விகாரத் தோற்றம் தரும் உடம்புப் பகுதிகளில் உடம்பின் மற்ற பகுதிகளில் உள்ள திசுக்களை எடுத்து ஒட்ட வைக்கலாம். அவை எளிதாக ஒட்டிக்கொண்டு வளர்ந்து, ஏற்பட்ட ஊனத்தை மறைத்து அழகூட்டிபழைய நிலையை எளிதாக ஏற்படுத்தும். இதுவே ஒட்டு மருத்துவம் என அழைக்கப்படுகிறது. புற்றுநோய் போன்ற நோய்களின் தன்மைகளை ஆராய உடலின் திசுக்களைத் தனியே பிரித்தெடுத்து ஆராய்வதுண்டு. இவற்றைச் சோதனைக் குழாய்கள் மூலம்