பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

தைராய்டு

மற்றும் ஆக்சிஜனால் மேலும் மேலும் துரு ஏற துணை செய்கிறது.


துருவ நட்சத்திரம் : ‘துருவம்’ எனும் வட சொல்லிற்கு ‘வடக்கு’ என்பது பொருளாகும். துருவன் எனும் சிறுவன் இறைவனை நோக்கிக் கடுந்தவம் இருந்ததனால் அவன் பெயரில் ‘துருவ நட்சத்திரம்’ என அழைப்பாருமுளர். வடக்கே காணும் இந் நட்சத்திரத்தை ஆங்கிலத்திலும் வட நட்சத்திரம் (North star or pole star) என்று அழைக்கின்றனர், பண்டைக்காலம் முதலே கப்பல் மாலுமிகள் இத்துருவ நட்சத்திரத்தை வைத்தே திசையறிந்து வந்தனர்.

சூரியனைவிட 4,000 மடங்கு பேரொளி கொண்டது துருவ நட்சத்திரம். இருப்பினும், இந்நட்சத்திரம் சூரியனுக்கப்பால் நெடுந் தொலைவில் இருப்பதால் கதிரவனைப் போன்று ஒளியைப் பரப்புவதில்லை.

உலகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும். அதன் அச்சு துருவ நட்சத்திரத்தை நோக்கிய படி அமைந்திருப்பதால் அது எத்திசையிலும் உதிக்காது என்றென்றும் ஒரே இடத்தில் இருப்பதுபோல் நமக்குத் தோற்றமளிக்கிறது.


தெர்மாஸ் கலம் : சூடான அல்லது குளிர்ந்த பால் பொருட்களைச் சூடு அல்லது குளிர்ச்சி குறையாமல் நீண்ட நேரம் வைத்திருக்கப் பயன்படும் தட்ப, வெப்பநிலைக் காப்புக்கலம் தெர்மாஸ் கலம் (Thermos Flask) ஆகும். இதை வெற்றிடக் கலம் (Vaccum Flask) என்றும் அழைப்பார்கள்.

சாதாரணமாக நன்கு சூடான கொதி நீரை ஒரு பாத்திரத்தில் வைத்திருந்தால் சிறிது நேரத்தில் வெப்பம் தணிந்து குளிர்ந்து விடுகிறது. இதற்குக் காரணம் வெந்நீரின் வெப்பத்தைப் பாத்திரத்தின் பக்கங்கள் கடத்தி வெளிக்காற்றுடன் சேர்த்து விடுவதேயாகும். இது பாத்திரத்தின் இயல்பு ஆகும். பாத்திரம் திறந்திருந்தால் மேற்பகுதி மூலம் வெளிக் காற்று வெப்பத்தை ஈர்த்துப் பரவச் செய்கிறது. ஆனால், இந்நிலை தெர்மாஸ் கலத்தில் ஏற்படுவதில்லை.

இக்கலம் மெல்லிய இரு கண்ணாடிச் சுவர்களைக் கொண்ட குடுவையாகும். இக் கண்ணாடிச் சுவர்களுக்கிடையேயுள்ள காற்று முற்றிலுமாக வெளியேற்றப்பட்ட வெற்றிடக் குடுவையாகும். காற்று வெளியேற்றப்பட்டதன் அறிகுறியாக இக்குடுவையின் கீழ்ப்பகுதியில் வார்ப்பு மூலம் மூடப்பட்ட ஒரு சிறுமுளை நீட்டிக் கொண்டிருக்கும். இம்முனை சேதமடையாதவாறு ஒரு தக்கை மீது நிறுத்தி உலோகம் அல்லது பிளாஸ்டிக் உறையுள் வைக்கப்பட்டிருக்கும். அடிப்பகுதியில் உள்ள தக்கை தாங்கி கண்ணாடி குடுவையையும் அதன் அடிப்பகுதி முனைக்கும் அதிர்ச்சி ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இக்கண்ணாடிக் குடுவையில் மூடி வைக்கப்படும் பொருளின் வெப்பம் அல்லது குளிர் வெளியேறாதபடி இதிலுள்ள வெற்றிடம் காக்கிறது. ஏனெனில், காற்று இல்லாத வெற்றிடத்தால் வெப்பத்தை அல்லது குளிர்ச்சியை வெளியேற்ற முடியாது. மேலும், கண்ணாடிச் சுவர்கள் அலுமினியக் கரைசல் பூச்சைக் கொண்டிருப்பதால் வெப்பச் சலனம் அல்லது வெப்பக் கதிர் வீச்சு மூலம் வெப்பம் வெளியேற வாய்ப்பில்லாமல் போகிறது. இதனால், தெர்மாஸ் கலத்தில் வைக்கப்படும் சூடான அல்லது குளிர்ந்த பொருள் பல மணி நேரங்கள் சூட்டையோ, குளிர்ச்சியையோ இழக்காமல் இருக்கிறது.


தைராய்டு : இது ஒரு நாளமில்லாச் சுரப்பியாகும். இச்சுரப்பி குரல் வளைக்கு அடியில்

தைராய்டு சுரப்பி

இரு பக்கங்களிலுமாக அமைந்துள்ளது. ஆண்களிடம் காணப்படும் தைராய்டு சுரப்பியைவிட பெண்களிடமும் குழந்தைகளிடமும் சற்றுப் பெரியதாக இருக்கும். தைராய்டு சுரப்பியின் எடை 80-லிருந்து 60 கிராம் வரைதான் இருக்