பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோல்

179

இதனால், அப்பகுதிகள் எளிதில் காயம்பட நேர்கின்றது. உணர்ச்சியற்ற அப்பகுதியை எளிதில் கீறினாலோ அல்லது சுட்டாலோ நோயாளிக்கு உரைப்பதில்லை. இதனால், தொழுநோயாளியின் தசைப் பகுதி பயனற்றதாகி விடுகிறது. நாளடைவில் விரல்போன்ற பகுதிகள் வளைய நேர்கின்றது. சில சமயம் கை, கால், விரல் எலும்புகள் குறுகிவிடுகின்றன. நாளடைவில் இல்லாமல் மறைந்தும் விடுகின்றன.

தொழுநோய் உலகெங்கும் காணப்படுகிறது. குறிப்பாக வெப்ப மண்டல நாடுகளாக வட ஆஃப்ரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றன. அமெரிக்காவின் தென் பகுதியிலும் சிறிய அளவில் இந்நோய் உண்டு.

தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள் தோன்றும்போதே அதைக் கண்டறிந்து, அந்நோய்க்கென கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘ஆன்டிபயாடிக்' மருந்துகளைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் எளிதில் குணமடைந்து விடலாம்.இதற்கு நாம் உடலைப் பரிசோதித்து நோயின் ஆரம்ப அறிகுறிகள் ஏதும் உண்டா என டாக்டர் அல்லது தொழுநோய் ஆய்வாளர்கள் மூலம் கண்டறிய வேண்டும்.


தோல் : நம் உடலில் இதயம், ஈரல் போன்ற நம் உடலைப் போர்த்தியிருக்கும் தோலும் ஒரு

தோலின் உள் அடுக்குத் தோற்றம்

முக்கிய உறுப்பாகும். மனிதத் தோலை "சருமம்’ என்று அழைப்பார்கள். இதயம் எவ்வாறு குறிப்பிட்ட பணிகளைச் செவ்வனே செய்கின்றதோ அதே போன்று மனிதத் தோலாகிய சருமமும் குறிப்பிட்ட சில பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது.

உடலின் மற்ற உறுப்புகள் சிறிய அளவில் இடத்தைப் பெற்றுள்ளன. ஆனால், தோல் உடலின் வெளிப்புறம் முழுவதையும் தன் இடமாகப் பெற்றுள்ளது. இத்தோலின் அடிப்புறம் வியக்கத்தக்க வகையில் உயிரணுக்களாகிய செல்களையும் இரத்த நாளங்களையும் நரம்புகளையும் பெற்றுள்ளது.

தோல் இரண்டு அடுக்குத் திசுக்களையுடையதாக அமைந்துள்ளது. கீழ் அடுக்கு (Covium), மேல் அடுக்கு (Epidermis) ஆகிய இவ்விரு அடுக்குகளும் வியக்கத்தக்க வகையில் இணைந்துள்ளன. கீழடுக்கிலுள்ள முளைகள் மேலடுக்குக்கள் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இவை அவற்றைப் பிணைத்து வைக்கும் வார்ப்புபோல் அமைந்துள்ளன. இந்த முளைகள் பெற்றுள்ள முனைகள் உடல் தோலின் சில பகுதிகளில் வெளிப்புறமாகவும் அமைந்துள்ளன. குறிப்பிட்ட வகை வடிவங்களில் அமைந்துள்ள அவற்றை நாம் கண்ணால் காணலாம். நம் ரேகைகள் அவ்வாறு அமைந்தனவே யாகும்.

மேலடுக்காக அமைந்துள்ள தோலின் மேற் பகுதியில் எந்தவித இரத்த நாளங்களும் இல்லை. இப்பகுதியில் அமைந்துள்ள உயிரணுக்களாகிய செல்கள் மடியும் முன்பாகவே புதிய உயிரணு இத்தகைய செல் கொம்புகளால் வேயப்பட்ட கூரை போல் அமைகின்றன. இஃது நமக்குப் பெரும் பயனளிப்பதாக உள்ளது. இவை உடலைப் பாதுகாக்கும் கேடயமாக அமைந்துள்ளது.

தோலின் கீழ் அடுக்கு உயிரோட்டத்துடன் இயங்குவதாகும். இதன் முக்கிய பணியே புதிய புதிய உயிரணுச் செல்களை உருவாக்கித் தருவதாகும். உருவாக்கப்பட்ட புதிய செல்களை மேல் நோக்கித் தள்ளுகிறது.

நம் இயல்பான செயற்பாடுகளால் நாள் தோறும் இலட்சக்கணக்கான செல்களை