பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

நாளமில்லாச் சுரப்பிகள்

buds) என்றே அழைக்கப்படுகின்றன. இந்த அரும்புகள் மீது உண்ணும் உணவுபட்ட

நாக்கின் அமைப்புத் தோற்றம்

வுடனேயே அதன் சுவைத்தன்மையை மூளைக்கு அனுப்பி, அதன் மூலம் முழுச் சுவையை நாம் உணரச் செய்கின்றன.

அதிலும் நாக்கில் ஒவ்வொரு பகுதியிலுள்ள அரும்புகள் ஒவ்வொரு வகையான சுவையை உணரும் தன்மையுடையனவாக அமைந்துள்ளன. நாக்கின் முன் பகுதியிலுள்ள அரும்புகள் இனிப்புச் சுவையை எளிதாக அறிந்து உணர்த்துகின்றன. அவ்வாறே நாக்கின் பின் பகுதி கசப்புச் சுவையை உணர்கின்றன. நாக்கின் இருபுறங்களிலும் உள்ள அரும்புகள் உப்புச்சுவை, புளிப்புச்சுவை போன்ற சுவைகளை உணர்கின்றன. நாக்கின் நடுப் பகுதிக்கு சுவயுணர் திறன் இல்லை. ஏனெனில், அப்பகுதியில் சுவை அரும்புகள் ஏதும் இல்லை.

சில சமயம் உடலில் உண்டாகும் நோயின் தன்மைக்கேற்ப நாக்கில் புண்கள் ஏற்படுவதுண்டு. மருத்துவரிடம் காட்டி தக்க மருந்து உண்டு இப்புண்களைப் போக்கிக் கொள்ள வேண்டும்.


நாளமில்லாச் சுரப்பிகள் : நம் உடலில் பலவிதச் சுரப்பிகள் உள்ளன. இச்சுரப்பிகள் அனைத்தும் உயிரணுத் தொகுதிகளால் ஆனவைகளாகும். இவை இரண்டு பெரும் பிரிவுகளாக அமைந்துள்ளன. முதலாவது நாளமுள்ள சுரப்பிகள். இரண்டாவது, நாளமில்லாச் சுரப்பிகள்.

நாளமுள்ள சுரப்பிகட்கு, சுரக்கும் சுரப்பியைக் கொண்டு செல்ல நாளங்கள் உண்டு. அவற்றின் மூலம் சுரப்பு உறுப்புகளைச் சென்றடைகின்றன. சான்றாக, நாக்கின் அடியில் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகளிலிருந்து உமிழ்நீர் சுரக்கிறது. அது நாளத்தின் வழியாக வெளியேறி வாய்க்கு வந்து சேர்கிறது. இதனால் இத்தகைய சுரப்பிகள் நாளமுள்ள சுரப்பிகளாகின்றன.

சுரப்புகளைக் கொண்டு செல்ல நாளங்கள் இல்லை. இவற்றின் சுரப்புகள் நேரிடையாக இரத்தத்தோடு கலக்கின்றன. இவை நாளமில்லாச் சுரப்பிகளாகும். நாளமில்லா சுரப்பி கள் சுரக்கும் சுரப்புக்கள் 'ஹார்மோன்கள்’

நாளமில்லாச் சுரப்பிகள்


என்று அழைக்கப்படுகிறது. உடல் நல்ல வளர்ச்சியடையவும் ஒழுங்கான உருவமைப் புப் பெறவும் உண்ணும் உணவுச்சத்துக்களை உடல் நன்கு பயன்படுத்திக் கொள்ளவும் உறு துணையாய் அமைவது இந்த ஹார்மோன்களே யாகும். இவை சரிவர இயங்கவில்லையென்