பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நியூட்டன்

187

உண்டாகும். தொண்டைக் கரகரப்பும் இருமலும் ஏற்படும். கடுமையான தலைவலியும் தூக்கமிலாத் தன்மையும் உண்டாகும். இந் நோய் அறிகுறிகள் தென்பட்டவுடனேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.


நியான் : இது இயற்கையாகக் கிடைக்க கூடிய வாயு. இது ஒரு தனிமம். மற்ற தனிமங்களுடன் சேர்ந்து புதுச் சேர்க்கை ஏற்படுத்தாத தனிமமாகும். இவ்வாயுவை முதன்முதலில் 1898ஆம் ஆண்டில் வில்லியம் ரான்சே என்பவரும் டிராவெர்ஸ் என்பவரும் இணைந்து கண்டுபிடித்தனர்.

கண்ணாடிக் குழலிலுள்ள காற்றை வெளியேற்றிவிட்டு குறைவான அழுத்தத்தில் சுமார் 10 மி.மீ. அளவில் நியான் வாயுவை நிரப்பி, அக்குழலினுள் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அவ்வாயு ஒளிரும் தன்மை பெறும். அவ்வொளி சிவப்புக் கலந்த ஆரஞ்சு வண்ண வெளிச்சமாக வெளிப்படும். இரவில் மட்டுமல்லாது பகலிலும் இவ்வெளிச்சம் பளிச்செனக் கண்ணில்படும். மூடுபனி, பனிப்பொழிவு உள்ள பகுதிகளில் நியான் விளக்குகளே வெளிச்சமூட்ட அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தெளிவுக்காக விமான ஒடு பாதைகளிலும் விளம்பர எழுத்துக்களிலும் இந்த வாயுவே பயன்படுத்தப்படுகின்றன. நியான் வாயுவோடு சிறிதளவு பாதரசத்தைக் கலந்தால் ஒளிமிக்க நீலநிறம் கிடைக்கும். மேலும் நியான் வாயுவைப் போன்ற மந்த வாயுக்களான ஹீலியம், ஆர்க்கான், கிரிப்டான், சினான் போன்றவற்றைச் சேர்த்துப் பயன்படுத்தும் போது வெவ்வேறு நிறங்களைப் பெற இயலும்.


நியூட்டன் : உலகப் பெரும் அறிவியல் மேதைகளுள் ஒருவர் நியூட்டன். இவரது முழு இயற்பெயர் ஐசக் நியூட்டன் என்பதாகும். இவரது அறிவியல் ஆற்றலையும் கண்டுபிடிப்புத் திறனையும் பாராட்டி இங்கிலாந்து அரசு இவருக்கு அளித்த ‘சர்’ பட்டத்தையும் இணைத்து இவரை 'சர் ஐசக் நியூட்டன்' என்றே உலகம் அழைத்து வருகிறது.

சிறந்த கணிதப் பேராசிரியராக விளங்கிய இவரை ராயல் சொசைட்டி 1672இல் தன் உறுப்பினராக ஆக்கிக் கொண்டது. இவர் 1704இல் வெளியிட்ட நிறம் மாறும் ஒளி பற்றிய நூல் புகழ்பெற்ற படைப்பாகும். இவரது இயற்பியல் கண்டுபிடிப்புகளைப் பாராட்டி ஆங்கில அரசு இவருக்கு ‘சர்’ பட்டமளித்துச் சிறப்பித்தது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் இளமை முதலே கணிதத்திலும் வானவியல் ஆராய்ச்சியிலும் பெருவிருப்பமுடையவராக விளங்கினார். அறிவியல் ஆய்வுக்குத் தேவையான பல அடிப்படை உண்மைகளைக் கண்டறிந்து கூறிய பெருமை இவருக்குண்டு.

ஒரு சமயம் ஆப்பிள் மரம் ஒன்றின்கீழ் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு ஆப்பிள் பழம் மரத்தினின்றும் கீழே விழுந்தது. இதைப் பார்த்த நியூட்டன் மரத்திலிருந்து ஆப்பிள்

ஐசக் நியூட்டன்

பழம் ஏன் கீழ் நோக்கியபடி விழவேண்டும்: என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தார். அச் சிந்தனையின் விளைவாக அவர் கண்டு பிடித்ததே ‘புவியீர்ப்புச் சக்தி’ எனும் புதிய இயற்பியல் தத்துவம். இதன் அடிப்படையிலேயே பூமி, சந்திரன், நட்சத்திரங்கள் ஈர்ப்பாற்றலால் ஒன்றோடொன்று மோதாமல் இயங்கி வருகின்றன என்ற உண்மையையும் கண்டறிந்தார். இதன்பிறகு ‘ஈர்ப்பாற்றல்’ பற்றிய புதிய தத்துவங்களையும் கோட்பாடுகளையும் விரிவாக வகுத்தமைத்தார்.

இக்கோட்பாடுகளின் அடிப்படையில் தொடர்ந்து ஆய்வு செய்து இயக்கவியல் (Dynomics), நிலையியல் (Statics) என்னும் புதிய இயற்பியல் தத்துவப் பிரிவுகளைக் கண்ட்றிந்து கூறினார். பொருள்களின் இயக்கம் எந்தெந்த வகையில் அமைந்துள்ளன என்