பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

நிலக்கரி

பதைப் பற்றி முனைப்பாக ஆய்வு செய்து மூன்று வகையான விதிகளை வகுத்தார். அவை நியூட்டன் இயக்கவிதி (Newton’s Laws of Motion) என்ற QuuTr(350Gu அழைக்கப்படுகிறது.

இவரது கண்டுபிடிப்புகளுள் குறிப்பிடத்தக்க மற்றொன்று 'பிரதிபலிப்புத் தொலை நோக்காடி' (Reflecting Telescope) என்னும் தொலைநோக்குக் கருவிக் கண்டுபிடிப்பாகும். இக்கண்டுபிடிப்புக்குப் பிறகே வானவியல் ஆய்வுகள் விரைவு பெறலாயின.


நியூட்ரான் : பொருட்களின் அடிப்படை பகுதி உறுப்புகளுள் துகள் ஒன்று. துகள் பகுதியின் கருவில் இஃது அமைந்துள்ளது. ஹைட்ரஜன் அணுவைத் தவிர்த்து பிற அணுப் பகுதிகள் அனைத்திலும் நியூட்ரான் அமைந்துள்ளது. ஹைட்ரஜன் அணுக் கருவில் புரோட்டான் உண்டு; நியூட்ரான் இல்லை. மற்ற அணுக்கருக்களில் புரோட்டானும் நியூட்ரானும் அமைந்துள்ளன.

1980ஆம் ஆண்டிலேயே ஜெர்மானிய ஆராய்ச்சியாளர்களான போத்தே, பெக்கர் என்பவர்களால் நியூட்ரான் கண்டறியப்பட்ட போதிலும் அதன் முழுத் தன்மைகளை ஆய்ந்தறிந்து கூறிய அறிவியல் அறிஞர் சாட்விக் என்பவராவார். 1982ஆம் ஆண்டில் தன் ஆய்வையும் அதற்கு நியூட்ரான் எனும் பெயரையும் அறிவித்தவர் இவரேயாவார்.

அணுச்சக்தி மூலம் மின் விசை உற்பத்தி செய்வதில் நியூட்ரானின் பங்கு பெரிதாகும்.


நிலக்கரி : நீராவி ரெயில் வண்டி, அனல் மின் நிலையம் போன்றவற்றில் வெப்பம் உண்டாக்க நிலக்கரி எரி பொருளாகப் பயன் படுத்தப்படுகிறது. சிறந்த இயற்கை எரி பொருளான நிலக்கரி நிலத்தடியிலிருந்து இயற்கையாக வெட்டி எடுக்கப்படுவதால் ‘நிலக்கரி’ எனப் பெயர் பெற்றது.

சுமார் முப்பத்தைந்து கோடி ஆண்டுகட்கு முன்னர் பூமியின் மீது பெரும் பெரும் மரங்களும் அடர்ந்த செடி கொடிகளைக் கொண்ட காடுகளும் செழித்து வளர்ந்திருந்தன. நாளடைவில் அவை பல்வேறு காரணங்களால் மண்ணுள் புதையுண்டன. பாறை போன்ற கடினப்பொருட்களின் இடையறாத அழுத்தத்தாலும் பூமிக்கடியில் இயற்கையாக இருந்து வந்த வெப்பத்தாலும் அவை மக்காமல் கருகி கெட்டித்தன்மை பெறலாயின. இவ்வாறு, இறுக்கமடைந்து கல் போன்ற கடினத்தன்மை பெற்று கரியாகியது. நிலக்கரி இந்நிலையைப் பெற பல்லாயிரம் ஆண்டுகள் ஆயின.

நிலக்கரி படிவுகளாகப் பல கி.மீ. சுற்றளவில் பூமிக்கடியில் பாளம் பாளமாக அமைந்துள்ளன. சில இடங்களில் இந்நிலக்கரி படிவுகள் ஏழு அல்லது எட்டு மீட்டர் கனத்திற்குப் பாறை புதைவுகளுக்கிடையே இருப்பதும் உண்டு. பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி நிலக்கரிப் படிவுகள் வெட்டி எடுக்கப்பட்டு வெளிக்கொணரப்படுகின்றன.

நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை அப்படியே நேரடியாக எரிபொருளாகப் பயன்படுத்தலாம். சிறு சிறு கட்டிகளாகவோ தூளாக ஆக்கியோ

நிலக்கரிச் சுரங்கம்

பயன்படுத்துகிறார்கள். வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை மேலும் பல வேதியியல் மாறுதல்களுக்கு உட்படுத்தி, சிறந்த எரி பொருள்களாக உருமாற்றிப் பயன்படுத்தப்படுவதும் உண்டு.

நிலக்கரியைக் காற்றுப்புகாத நிலையில் எரிக்கும்போது அதிலிருந்து பல புதிய பொருட்கள் வெளிப்படுகின்றன. அவற்றைத்