பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பருவ காலங்கள்

201

தேய்க்க வேண்டும். அப்போதுதான் பற்களுக்கிடையேயுள்ள அழுக்குகள் நீங்கும். ஒவ்வொரு

பல்லின் அமைப்பு (கோரைப்பல்)

முறையும் உணவு உண்டபின் வாயை நன்கு கொப்பளிப்பதுடன் காலையிலும் இரவிலும் இருமுறை பல் துலக்குவது நல்லது.

எனாமலின் அடிப்பகுதியே தந்தினி அல்லது தந்தப் பகுதியாகும். இதுவே பல்லின் கழுத்துப் பகுதி. இது எலும்புபோல் உள்ளதாகும். இதன் உட்புறத்தில் நரம்புகளும் இரத்த நாளங்களும் அமைந்துள்ளன. அவற்றாலான பற்கூழ் இதனுள் பொதியப்பட்டுள்ளது. இஃது மிருதுவானதாகும்.

மூன்றாவது அடிப்பகுதியே வேர்ப்பகுதியாகும். இவ்வேர்ப் பகுதி தாடை எலும்புகளிலுள்ள குழிகளில் ஒருவகைக் காரைப் பொருளால் இறுக்கமாகப் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. மேற்பகுதி ஈறு எனும் கெட்டிச் சதைப் பொருளால் அழுத்தப்பட்டிருக்கும். இதனால் பல் எளிதாக விழுந்து விடுவதில்லை. சில பற்கள் ஒரே வேரையும் மற்றும் சில பற்கள் இரண்டு வேர்களையும் கொண்டு அமைந்துள்ளன.

மனிதர்களுக்கும் மற்ற பாலூட்டி உயிரினங்களுக்கும் பற்கள் வாயில் கீழ், மேல் தாடைகளில் அமைந்துள்ளன. மீன்கள். சில வகை விலங்குகள், ஊர்வன ஆகியவற்றிற்கு அவற்றின் உணவுப் பழக்கத்திற்கேற்ப அண்ணம், குரல் வளை போன்ற வெவ்வேறு இடங்களில் பற்கள் அமைந்துள்ளன. புலி போன்ற மிருகங்கள் பிற பிராணிகளின் இறைச்சியைக் கிழித்து உண்ணும் பழக்கமுடையனவாதலால் அதற்கேற்ப இவற்றின் பற்கள் கோரைப் பற்களாக நீண்டும் ஒரளவு வளைந்தும் அமைந்துள்ளன. எலி, அணில் போன்றவை பொருட்களைக் கொறித்து உண்பதால் அவற்றின் பற்கள் கூர்மையுடையனவாக உள்ளன. பாம்பின் பற்கள் உட்புறமாக வளைந்து அமைந்துள்ளது. காரணம் தாங்கள் பிடிக்கும் இரைகள் எளிதாகத் தப்பாமல் இருக்க வேண்டியும் பிடித்த இரைகளின் மீது நஞ்சைச் செலுத்தவுமேயாகும். யானை வாயின் இரு புறங்களில் நீண்டு துருத்திக் கொண்டிருக்கும் தந்தங்கள் பற்களேயாகும். பறவைகளுக்குப் பற்கள் இல்லை.


பருவ காலங்கள் : பருவ நிலை ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, கோடை காலம், குளிர்காலம், மழைக்காலம் என மாறி மாறி வருகின்றன. நம் நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு பருவ காலமும் ஒரு சில மாதங்கள் நீடித்து, பின் வேறொரு பருவ காலமாக மாறி விடுகின்றது. ஆனால், மற்ற நாடுகளில் இப் பருவ காலங்கள் குறுகிய கால எல்லை அல்லது நீண்டகால எல்லைகளைக் கொண்டதாக உள்ளது.

இவ்வாறு உலகெங்கும் பருவகாலங்கள் மாறி மாறி அமைவதற்கு அடிப்படைக் காரணம் பூமி சூரியனைச் சுற்றி வருவதே யாகும். பூமி சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும் அதே சமயத்தில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சுழன்று வருகிறது. அவ்வாறு சுழலும்போது செங்குத்தாக இல்லாமல் 23½0 சாய்வாகவே சுழல்கிறது. அவ்வாறு சுழலும் போது ஆறு மாதங்கள் பூமியின் வட பகுதி சூரியனை நோக்கியபடியே சாய்ந்து இருக்கும். அச் சமயத்தில் பூமியின் வட பகுதி சூரிய ஒளியைப் பெறுகிறது. பூமியின் வட பகுதிக்கு அது கோடை காலமாகும். அதே சமயம் பூமியின் தென் பகுதியில் சூரிய ஒளி படியாததால் அங்குக் குளிர் காலமாக அமைகிறது. அடுத்த