பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

பழுப்பு நிலக்கரி

ஆறு மாதங்கள் பூமியின் தென்பகுதி சூரியனை நோக்கி இருப்பதால் தென் பகுதி கோடை காலமாகவும் வடபகுதி குளிர் காலமாகவும் அமைகிறது. இவ்வாறு பூமியின் வட தென் பகுதிகளில் கோடை காலமும் குளிர் காலமும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை மாறி மாறி அமைகிறது.

பருவ காலங்களைக் காட்டும் வரைபடம்

நீள் வட்டப் பாதையில் பூமி சூரியனைச் சுற்றி வரும் உலகின் எப்பகுதி சூரியனுக்கு நேராகவும் நெருக்கமாகவும் அல்லது சற்று விலகியும் இருக்குமோ அதற்கேற்ப குறிப்பிட்ட கால எல்லைகளோடு கூடிய பருவ காலங்கள் அமைகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை மார்ச் முதல் ஜூன் வரை கோடைக் காலமாகும். கோடை காலத்தில் வெயில் கடுமையாக இருக்கும். ஜூலை முதல் அக்டோபர் வரை மழை குறைவாகவும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மிகுதியாகவும் மழை பெய்யும். ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர் காலமாகும்.

ஆண்டில் சில மாதங்களில் பகல் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இருக்கும். இன்னும் சில மாதங்களில் பகல் நேரம் குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும். உலகம் முழுமையும் செப்டம்பர் 28ஆம் தேதியும் மார்ச் 21ஆம் தேதியும் சம அளவில் இரவும் பகலும் அமைகிறது.


பழுப்பு நிலக்கரி : நிலக்கரியில் பழுப்பு நிலக்கரி என்பது ஒரு வகையாகும். சாதாரண நிலக்கரியை விட பழுப்பு நிலக்கரி சற்று கடினத் தன்மை குறைந்ததாகும். எளிதில் தூளாகும் தன்மை கொண்டதால் இக்கரியை நீண்ட காலத்திற்குச் சேமித்து வைத்துப் பயன்படுத்த இயலாது. பூமிக்குள்ளிலிருந்து