பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழுப்பு நிலக்கரி

203

தோண்டியெடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியில் 60 சதவிகிதம் நீர் அடங்கியுள்ளது. எனவே, இந்நீரைப் போக்கத் தூளாக்கிப் பின் கரிக்கட்டிகளாக உருமாற்றுகின்றனர். இதுவே 'லிக்கோ கரி' ஆகும். இக்கரி எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டதாகும்.

பழுப்பு நிலக்கரி சாதாரண சமையல் அடுப்புக்கு பயன்படுத்துவது முதல் அனல்மின் நிலையம்வரை வெப்பம் பெற எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

பழுப்பு நிலக்கரி இந்தியாவில் நெய்வேலி, ஜெயங்கொண்டம் எனுமிடங்களில் அதிக அளவு வெட்டி யெடுக்கப்படுகின்றது. அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, தென்மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலும் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது.

பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களின் அருகிலேயே அனல் மின் நிலையங்களும் உரத் தொழிற்சாலைகள், மற்றும் உருக்குத் தொழிற்சாலைகளும், உருவாக்கப்பட்டுள்ளன.இத்தகைய தொழில்களின் வளர்ச்சிக்குப் பழுப்பு நிலக்கரி பெருந்துணை புரிகிறது.

பழுப்பு நிலக்கரி முற்றிலும் பக்குவம் அடையாத நிலக்கரி ஆகும். எனவே இதில் இருந்து கணக்கற்ற பயனுள்ள கரிமச்சேர்மங்கள் பெறப்படுகின்றன. இவைகளிலிருந்து அதிக அளவு உரங்களும் தயாரிக்கப்படுகின்றன.


பனி : மார்கழி, தை மாதங்கள் குளிர் காலமாக அமைந்துள்ளன. அப்போது பகலைவிட இரவு நேரம் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இரவில் திறந்தவெளியில் போடப்பட்ட துணி, நீரில் நனைந்ததுபோல் ஈரமாகி விடுகிறது. செடி கொடிகளின் மேல் நீர்த் திவலைகள் படிகின்றன. சில செடிகளின் கீழே தரையில் சொட்டு சொட்டாக நீர் சொட்டியிருப்பதையும் காணலாம். இந்நீரையே பனிநீர் என்கிறோம். இக் காலத்தை 'பனிக்காலம்’ என அழைக்கிறோம்.

'பனி நீர்' எவ்வாறு உருவாகிறது? சாதாரணமாக நாள் முழுவதும் வெயிலில் இருக்கும் செடி, கொடி மரம் போன்ற தாவரங்கள் வெப்பமடைகின்றன. இரவில் இவை வெப்பத்தை வெளியிட்டுக் குளிர்ச்சியடைகின்றன. காற்றில் நீர்த் தன்மை இருப்பது இயல்பு. அதிலும் வெப்பமுற்ற காற்று அதிக அளவில் நீரை ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அதிக நீரை ஈர்த்துக் கொண்ட காற்று இரவில் தாவரங்களின் மீது தவழ்ந்து செல்லும்போது தான் ஈர்த்துள்ள நீரை குளிர்ச்சியான தாவரங்களின் மீது நீர்த் திவலைகளாகப் படியச் செய்கிறது. இதுவே பணி நீர்.

காற்றின் வெப்பநிலை320 பாரன்ஹீட்டுக்குக் குறையுமானால் அஃது குளிர் காற்றாக மாறி விடும். வெப்பம் குறைவான ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பகலைவிட இரவு குளிராக இருப்பதற்குக் காரணம் காற்றின் வெப்பநிலை வெகுவாகக் குறைந்துவிடுவதேயாகும். 320-க்கும் குறைவானால் பணித் துளிகள் வெண்பனியாக மாறிவிடும். இதுவே 00 செல்லுமானால் பனிக் கட்டியாக உருமாறி விடும். சிலசமயம் மழைக் காலத்தில் பனிக்கட்டிகள் விண்ணிலிருந்து மழையோடு கலந்து விழுவதுண்டு. இவை ‘ஆலங்கட்டிகள்’ என அழைக்கப்படும். இவற்றின் மீது வெப்பமோ, வெப்பக் காற்றோ பட்டால் பனிக்கட்டி உருகி நீர் நிலையை அடைந்துவிடும். நீரைச் செயற்கை முறையில் பனிக்கட்டிகளாகச் செய்வர். இதற்கு அடர்த்தி குறைவு; அளவு பெரிதாக இருக்கும். இதனால் நீரில் போடப்படும் பனிக் கட்டி மிதக்கும்.

சில சமயம் குளிர் மிகுந்த நாடுகளில் உள்ள ஏரி, குளங்கள் 00-க்குக் கீழே வெப்பம் குறையும் போது நீரின் மேற்பகுதி பனிக்கட்டியாக மாறி விடும். ஆனால், அதன் அடியில் நீர் அப்படியே இருக்கும். நீரின் வெப்ப நிலையை மேலுள்ள பனிக்கட்டிப்படலம் பாதுகாக்கிறது. இந்நீரில் வாழும் நீர்வாழ் உயிரினங்கள் பாதுகாப்புடன் உயிர் வாழும்.

தூய்மையான நீருக்கு நிறமில்லை என்பது நாம் அறிந்ததே. தூயநீர் பனிக்கட்டியாகும் போது அதற்குத் தனி நிறம் ஏதும் இருப்பதில்லை. தூய்மையற்ற நீர் பனிக்கட்டியாக மறினால் பல வண்ணங்களுடையதாகத் தோன்றும்.

பனிக்கட்டியில் கிருமிகள் ஏதும் உருவாவதில்லை. இதனால், காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன் போன்றவைகள் கெடாமல் இருக்க பனிக்கட்டியோடு வைப்பதுண்டு. குளிர் சுவை நீரில் பனிக்கட்டித் தூளைப் போட்டுப் பருகுவதும் உண்டு. ரெஃப்ரிஜி ரேட்டர் எனும் குளிர்பதனப்பெட்டி இதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.