பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

பாக்டீரியா


பாக்டீரியா : பாக்டிரியாக்கள் தமிழில் 'நுண்மங்கள்' அல்லது 'நுண்ணுயிரிகள்’ என அழைக்கப்படுகின்றன. இவை இரு வகையினவாக அமைந்துள்ளன. ஒருவகை, மணிதனுக்கு மிகவும் துணையாக அலைந்து நன்மை செய்து வருவன. மற்றொரு வகை, நோய்கள் உருவாவதற்குக் காரணமாயமைந்து

மண்ணில் கலந்துள்ள பாக்டீரியாக்கள்

தீங்கிழைத்து வருவனவாகும். நன்மை தரும் பாக்டீரியாக்களைவிட தீமை உண்டாக்குபவையே அதிகமாகும்.

நன்மை தரும் பாக்டீரியா தாவர வகையைச் சார்ந்ததாகும். மண்ணில் மறையும் உயிரினங்களை, தாவரங்களை மண்ணோடு மண்ணாக மக்கச் செய்வன இத்தாவரங்களேயாகும். இத்தகைய பாக்டீரியாக்கள் ஒரே உயிரணுவால் உருவானவைகளாகும். கண்களால் பார்க்க முடியாத நுண்ணுயிரியான இஃது, தான் உயிர் வாழ்வதற்கான உணவை பிற உயிர்களிடமிருந்தே கவர்ந்து கொள்கிறது.

மூன்று வகையான பாக்டீரியாக்கள்

பக்டீரியாக்கள் உயிர் வாழ் பிராணவாயுவாகிய ஆக்சிஜனும் ஈரப்பதமும் 750 வரையுள்ள வெப்ப நிலையும் அவசியமாகும். இவை திருகு வடிவிலும், உருள் உருவிலும் குச்சி போன்ற தோற்றத்திலும் உள்ளன.

இவை மடியும் உயிரினங்களையும் தாவரங்களையும் மண்ணோடு மண்ணாக நன்கு மட்கச் செய்வதால் அஃது சிறந்த உரமாக உருவாகிறது. இதனால் தாவரங்கள் நன்கு செழித்து வளர ஏதுவாகிறது. உயிரின வளர்ச்சிக்கு இன்றியமையாத ஹைட்ரஜனை பாக்டீரியாக்கள் காற்றிலிருந்து ஈர்த்து மண்ணுக்குத் தருவதால் செடிகள் அதை மண்ணிலிருந்து பெற்று நன்கு வளர்கின்றன. பாலைப் புளிக்கச் செய்து பாலடைக்கட்டி, தயிர்,

பலவகையான பாக்டீரியாக்கள்

மோர் தயாரிக்கவும் பாக்டீரியாக்களே துணை புரிகின்றன. பழச்சாற்றை நொதிக்கச் செய்வதும் பாக்டீரியாக்களே ஆகும்.

இனி, தீமை செய்யும் பாக்டீரியாக்களைப் பற்றிப் பார்ப்போம். இவ்வகை பாக்டீரியாக்களே டைபாய்டு, காலரா, டிப்தீரியா எனும் தொண்டையடைப்பான் நோய், நிமோனியாக் காய்ச்சல் இன்னும் பல தொற்று நோய்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன.