பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகை

215

மாறும் இயல்புடையது. ஆனால், மயிரிழை போன்ற பாரமீசியம் மீனைப் போன்று நீரில் விரைந்து நீந்தும் தன்மையுள்ளது.

புரோட்டோசோவாக்களை விஞ்ஞானிகள் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். ஒரு பிரிவு 'ரிஸோபோடா' என்றும் மற்றொரு பிரிவு 'இன்ஃபுசோரியா’ என்றும் அழைக்கப்படுகிறது. ரிஸோபோடாவுக்கு பொய்க்கால்கள் உண்டு. இவை எப்பக்கமும் நீளும். உடலுக்குள் இழுத்துக் கொள்ளவும் இயலும். இவற்றிற்குக் கவசம் போல கூடு உண்டு.

'இன்ஃபுசேர்ரியா' பிரிவு மிகவும் சிக்கலான அமைப்புடையதாகும். இவற்றிற்கு நுண்மயிர்கள் உண்டு. இவை நீரில் நகரும்போது இம்மயிர்கள் துடுப்புபோல் பயன்படுகின்றன.

கொசுவிலிருந்து இரத்தத்திற்கும் இரத்தத்திலிருந்து கொசுவிற்கும் பரவும் மலேரியா நோய் ஒட்டுண்ணிகள்.

சில புரோட்டோசோவாக்கள் ஒட்டுண்ணியாக மனிதர்களிடமும் விலங்குகளிடமும் வாழ்கின்றன. சில புரோட்டோசோவாக்கள் பிராணிகள் சிலவற்றிற்கு உணவாவதும் உண்டு. பெரும்பாலான புரோட்டோசோவாக்களால் மனிதனுக்கும் மற்ற விலங்குகளுக்கும் தீங்கே விளைகின்றன. மனிதர்களுக்கு மலேரியா நோயையும் உறக்கநோய் (Sleeping sickness) போன்ற கொடு நோய்களையும் புரோட்டோசோவாக்களே தோற்றுவிக்கின்றன. ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் பிற விலங்குகளுக்குக்கூட சிலவகை நோய்களை புரோட்டோசோவாக்கள் தோற்றுவிக்கின்றன.


புகை : எரிக்கப்படும் எரிபொருள் முழுமையாக எரியாததன் விளைவாக வெளிப்படுவதே புகையாகும். எரிக்கப்படும் எரிபொருள் முழுமையும் எரிந்தால் புகை ஏதும் வெளிப்படாது

பெரும்பாலான எரிபொருட்கள் கரியம் எனப்படும் கார்பன், நீர் வாயுவாகிய ஹைட்ரஜன், பிராணவாயுவாகிய ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றையும் சிறிதளவு கந்தகம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும். சில கனிமங்களின் சாம்பலும் கலந்திருக்கும். இந்த எரிபொருட்கள் முழுமையாக எரிந்து முடிந்தால் இறுதி விளைவாக கார்பன்டையாக்சைடு, நீராவி, நைட்ரஜன் ஆகியவை எஞ்சும். இவை தீங்கற்றவைகளாகும். எரி பொருளில் கந்தகமிருந்தால் கந்தக டையாக்சைடு சிறிதளவு வெளிப்படும். இது காற்றோடு அல்லது ஈரத்தோடு சேரும்போது அரிமான அமில (Corrosive acid) மாக மாறும்.

முழுமையாக எரியும்போது எரிபொருளானது உயர் வெப்பத்தில் ஆக்சிகரணத்துக்காக போதிய அளவு காற்றை எடுத்துக்கொள்ளும். இந்நிலைமை கெட்டித் தன்மையுள்ள எரிபொருட்களுக்குச் சரியாக அமையாது. இதனால் அவை புகையை வெளிப்படுத்துகின்றன. நிலக்கீல்,சத்தற்ற நிலக்கரி (Anthracite), கல் கரி (Coke) போன்றவை எரிக்கப்பட்டால் அவற்றிலிருந்து புகை வெளிப்படுவதில்லை. காரணம், எளிதில் ஆவியாகும் பொருள் எதுவும் அவற்றில் இல்லாததே யாகும்.

நீலக்கீல் (Bituminous coal) கரி குறைந்த வெப்பநிலையில் எரியும்போது உள்ளடங்கியுள்ள வாயு (Gases) வெளிப்படுகிறது. இதில் கலந்துள்ள தூசியும் சாம்பலும் புகையை உருவாக்குகின்றன. இதில் உள்ள தூசியும் சாம்பலும் நிலத்திலும் பிற பரப்பிடங்களிலும் அப்படியே படிகின்றன. சாதாரணமாக ஓரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு ஆண்டுக்கு 60 முதல் 75 டன்கள்வரை படிகின்றன. அதுவே தொழிற்சாலைப்பகுதியாயிருந்தால்இதைவிடப் பத்து மடங்கு அதிகமாகப் படியும்.

புகை பலவிதமான தீங்குகளைத் தோற்றுவிக்கின்றன. இது உடல் நலனைப் பாதிப்பதோடு சொத்துக்களையும் பயிர் பச்சைகளையும் பாதிக்கும். தொழிற்சாலை நிறைந்த பகுதிகளாக இருப்பின் சூரிய ஒளியின் அடர்த்தியைக் குறைக்கிறது. குறிப்பாக உடல் நலனுக்கு இன்றியமையாப்புறஊதாக்கதிர் (Ultra