பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

புரோட்டோபிளாசம்

violet)களின் அடர்த்தியைக் குறைத்துத் தீங்கிழைக்கிறது. தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையைக் காற்றுச் சிதறடிக்காமல் இருப்பின் தொழிற்சாலை நகரம் நாளெல்லாம் புகை மூட்டத்திலேயே இருக்க வேண்டியது தான். உண்மையில் புகை மூட்டமுள்ள பகுதியில் நுரையீரல், இதய நோய்களால் இறப்போரின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கும்.

தாவரங்களைப் பொறுத்தவரையில் புகை மிகப்பெரும் பாதகத்தை ஏற்படுத்துகிறது. தாவரங்களை சுவாசிக்கவிடாமல் புகைதடுக்கிறது. தேவையான அளவு சூரிய ஒளிக்கதிர்களைப் பெற முடியாதபடி தாவரங்களின் மேற்ப்ரப்பை புகைப் பொருட்களால் மூடிவிடுகிறது. அவ்வப்போது புகையிலிருந்து வெளிப்படும் அமிலம் தாவரங்களை நேரடியாகவே அழிக்கவும் செய்கிறது.

இத்தகைய பாதிப்புகள் நேராவண்ணம் தடுக்க தற்காலத்தில் புகை உறிஞ்சிக்

தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் புகை

கருவிகளைக் கண்டறிந்து, அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.


புரோட்டோபிளாசம் : இது தமிழில் 'உயிர்ச் சத்து' அல்லது ‘உயிர்ப் பொருள்' என்று அழைக்கப்படுகிறது. புரோட்டோப்பிளாசமாகிய உயிர்ச் சத்தின் பல செய்திகள் இன்னும் மர்மமாகவே உள்ளன. இதை உயிரூட்டமுடன் இருக்கச் செய்வது எது என்பது இன்னும் முழுமையாக அறியப்படாமலேயே உள்ளது.

மிருகங்கள், தாவரங்கள் ஆகியவற்றின் உயிர்ப் பகுதியாக புரோட்டோபிளாசம் உள்ளது. உயிரினங்கள். தாவரம் அல்லது மிருகங்கள் அனைத்தும் 'செல்’ எனப்படும் உயிரணுக்களாலானவையேயாகும். மனித உடலில் பல கோடி உயிரணுக்கள் உள்ளன.

உயிரணு ஒவ்வொன்றும் சவ்வு போன்ற வழவழப்பான பொருளால் மூடப்பட்டுள்ளன.